யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
'டாஸ்மாக்' மூல‌மாக ரூ.8,800 கோடி வருவாய்
சென்னை (ஏஜென்சி), சனிக்கிழமை, 10 மே 2008   ( 10:36 IST )
'டாஸ்மாக்' மதுக் கடைகளின் மூலமாக அரசுக்கு கடந்த நிதியாண்டில் (2007- 08) ரூ.8,816 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

இதுதொடர்பாக ள்துறை, மதுவிலக்கு மற்றும் யத் தீர்வை குறித்த அரசின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

டாஸ்மாக் மூலம் 2006-07-ம் நிதியாண்டில் ரூ.7,473 கோடி வருவாய் வ‌ந்து‌ள்ளது. இதன் மூலம், ஓராண்டில் மட்டும் ரூ.1,343 கோடி கூடுதல் வருவாய் அரசுக்குக் கிடைத்துள்ளது. இந்தியத் தயாரிப்பு அயல்நாட்டு மதுவகைகள், பீரின் விற்பனையும் கணிசமாக உயர்ந்துள்ளன.

மது விற்பனையை அரசே ஏற்று நடத்தும் திட்டம், கடந்த 2003-ஆம் ஆண்டு நவம்பர் 29-ம் தேதி நடைமுறைப்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஆட்சிக்கு வந்த தி.மு.க.வும் அதே நடைமுறையை பின்பற்றி வருகிறது.

2006-ஆம் ஆண்டு மே 13-ஆம் தேதி நிலவரப்படி, 6,699 சில்லறை மதுபான விற்பனைக் கடைகளை தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் நடத்திக் கொண்டிருந்தது.

தமிழகத்தில் தற்போது 6,800 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இ‌ந்த‌க் கடைக‌ளி‌ல் மொத்தம் 33,300 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சாலை விபத்து : தமிழகத்தில் ஓராண்டில் 12,000 பேர் பலி
சுனாமியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ரூ. 50.23 கோடி உதவி
புலிகள் ஊடுருவலை தடுக்க கடும் நடவடிக்கை : கருணாநிதி
ப்ளஸ் 2 :தோல்வியடைந்த மாணவர்களுக்கு ஜூனில் சிறப்பு தேர்வு
வேலூர் கோட்டையில் தொழுகை நடத்த முயன்றவர்கள் கைது
வேலை வாய்ப்பு: பாமக போராட்ட அறிவிப்பு
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace