|
| வேலை வாய்ப்பு: பாமக போராட்ட அறிவிப்பு |
| காஞ்சிபுரம் (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 9 மே 2008 ( 15:46 IST ) | |
காஞ்சிபுரம் மாவட்ட தொழிற்சாலைகளில் உள்ளூர் மக்களுக்கு 50 சதவீதம் வேலை வாய்ப்பு வழங்கக்கோரி பாமக போராட்ட எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து பாமகவின் மூத்த தலைவர் ஏ.கே.மூர்த்தி கூறியதாவது:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் எம்.பி. மேம்பாட்டு நிதியிலிருந்து பள்ளி கட்டிடங்கள், ரேஷன் கடைகள், குடிநீர் தொட்டிகள், தார் சாலைகள், சிமெண்ட் சாலைகள் போன்ற பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மேலும் பல பணிகள் நடைபெற்று வருகின்றன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தனியார் தொழிற்சாலைகள் அதிகளவில் உள்ளன. ஆனால் அவற்றில் உள்ளூர் மக்களுக்கு வேலை கொடுக்கவில்லை.
உள்ளூர் மக்களுக்கு 50 சதவீதம் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். இல்லையெனில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|