யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
மாநகராட்சியாக வேலூர், தூத்துக்குடி : சட்ட மசோதா தாக்கல்
சென்னை (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 9 மே 2008   ( 15:39 IST )
வேலூர், தூத்துக்குடி ஆகிய நகராட்சிகளை மாநகராட்சியாக நிலை உயர்த்தப்படுவது தொடர்பாக சட்ட மசோதாக்கள் இன்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டன.

உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த சட்ட மசோதாக்களில் கூறியிருப்பதாவது:

வேலூர் வரலாற்று சிறப்பு வாய்ந்த மற்றும் பாரம்பரியம் மிக்க ஒரு நகரம் ஆகும். பல புகழ் வாய்ந்த மருத்துவ மற்றும் கல்வி நிலையங்கள் அங்கு உள்ளன.

வேலூர் நகரத்தை சுற்றி பெரும் எண்ணிக்கையிலான தோல் தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. அந்த பகுதியில் சிறப்பு பொருளாதார மண்டலம் ஒன்றும், தகவல் தொழில்நுட்ப பூங்காக்களும் அமையவுள்ளன. எனவே, வளர்ந்து வரும் கட்டமைப்பு வசதிகளை எதிர் கொள்ளும் பொருட்டு வேலூர் நகராட்சியை, மாநகராட்சியாக உயர்த்துவது என அரசு முடிவு செய்துள்ளது.

வேலூர் மாநகராட்சி அமைக்க புதிய தனிசட்டத்தை இயற்றுவது தேவையாகும். அதற்கு தேவைப்படும் மாற்றங்களுடன் சிறப்பு சட்டத்தை இயற்ற அரசு முடிவு செய்துள்ளது.

தூத்துக்குடி வேகமாக வளரும் நகரம், சேதுசமுத்திர திட்டம் போன்றவற்றால் தூத்துக்குடி நகரத்திலும் அதனை அடுத்துள்ள பகுதிகளிலும் கட்டமைப்பு வசதிகளை பெருமளவு மேம்படுத்துவது, தேவையாக உள்ளது.

எனவே, தூத்துக்குடி நகராட்சி மாநகராட்சியாக நிலை உயர்த்தப்படும் என்று நகராட்சி நிர்வாகத் துறை பட்ஜெட் விவாதத்துக்கு பதில் அளித்தபோது உள்ளாட்சி அமைச்சர் அறிவித்தார்.

அதற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் தேவைப்படும் மாற்றங்களுடன் ஒரு சிறப்பு சட்டத்தை ஏற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது என சட்ட மசோதாக்களில் கூறப்பட்டுள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
காவல்துறைக்கு தன்னாட்சி அதிகாரம் : பாமக வலியுறுத்தல்
'எய்ம்ஸ்: நீதிமன்ற தீர்ப்புகள் திருத்தப்படும்'
‌ப்ள‌ஸ் 2: நாம‌க்க‌ல் மாண‌வி, செ‌ங்க‌ல்ப‌ட்டு மாணவ‌ன் முத‌லிட‌ம்
ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு : 84.4% பேர் தேர்ச்சி
இலங்கை பிரச்சனைக்கு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு: பிரணாப்
ப்ளஸ் 2 தேர்வு முடிவு: இன்று வெளியீடு
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace