யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
காவல்துறைக்கு தன்னாட்சி அதிகாரம் : பாமக வலியுறுத்தல்
சென்னை (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 9 மே 2008   ( 15:37 IST )
தமிழகத்தில் காவல்துறை ஒரு தன்னாட்சி அமைப்பாக செயல்படவேண்டும் என்று பாமக வலியுறுத்தியுள்ளது.

சட்டசபையில் இன்று காவல்துறை, தீயணைப்புத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது பாமக தலைவர் ஜி.கே.மணி பேசுகையில், தமிழகத்தில் கொலை, கொள்ளை, ஆட்கடத்தல், கூலிப்படைகள் வைத்து கொலைகள் செய்தல் போன்ற கொடுஞ்செயல்கள் அதிகரித்து வருகிறது என்றும், குறிப்பாக திமுக மாவட்ட செயலாளர் ஒருவரே கூலிப்படையின் மூலம் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்றும் கூறினார்.

கொலையாளிகளை தண்டிப்பதோடு, இதன் பின்னணியில் இருந்து தூண்டி விடுபவர்கள் யார் என்பதையும் கண்டுபிடித்து அவர்களையும் தண்டிக்க வேண்டும் வேண்டும் என்ற அவர், காவல்துறை ஒரு தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பாக எந்த தலையீடும் இன்றி செயல்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

குற்றவாளிகள் மீது புகார் செய்யப்படாமல் குற்றமற்றவர்கள் மீது புகார்கள் பதிவு செய்யப்படுவதை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்திய பாமக தலைவர், காவல்துறையில் மனித உரிமை மீறல்கள் அதிகம் நடப்பதாக ஒரு கருத்து உள்ளது என்றும், காவலர்களுக்கு மனித உரிமை குறித்த பயிற்சி வழங்க வேண்டும் என்றும் கூறினார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
'எய்ம்ஸ்: நீதிமன்ற தீர்ப்புகள் திருத்தப்படும்'
‌ப்ள‌ஸ் 2: நாம‌க்க‌ல் மாண‌வி, செ‌ங்க‌ல்ப‌ட்டு மாணவ‌ன் முத‌லிட‌ம்
ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு : 84.4% பேர் தேர்ச்சி
இலங்கை பிரச்சனைக்கு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு: பிரணாப்
ப்ளஸ் 2 தேர்வு முடிவு: இன்று வெளியீடு
'வ‌ண்டலூ‌ரி‌ல் வ‌ண்ண‌த்து‌ப்பூ‌ச்‌சி பூ‌‌ங்கா'
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace