யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
'எய்ம்ஸ்: நீதிமன்ற தீர்ப்புகள் திருத்தப்படும்'
சென்னை (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 9 மே 2008   ( 14:57 IST )
எய்ம்ஸ் மருத்துவமனையின் முன்னாள் இயக்குனர் வேணுகோபாலின் பதவி நீக்கம் செல்லாது என்று உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் தீர்ப்பு வழங்கியுள்நிலையில், 'நீதிமன்றங்களின் தீர்ப்புகள் விரைவில் திருத்தப்படும் என்பதில் சந்தேகம் இல்லை' என்று பாமக ந‌ிறுவன‌ர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை:

எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனராக இருந்த டாக்டர் வேணுகோபாலின் பதவி நீக்கம் தொடர்பாக, பாராளுமன்றம் நிறைவேற்றிய சட்டத்திருத்தம் செல்லாது என்று உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌‌ன் அமர்வு தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

ஜனநாயகத்தில் மக்கள் மன்றங்கள் தான் சட்டங்களை இயற்றும் உரிமை பெற்றவை. அவை நிறைவேற்றுகின்ற சட்டங்கள் செல்லாது என்று நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்குவதை பலமுறை பார்த்து வந்திருக்கிறோம்.

இந்த தீர்ப்புகள் மேல்முறையீடு மூலம் திருத்தப்பட்டுள்ளன. மக்கள் மன்றங்களால் மீண்டும் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதுபோல் இந்த தீர்ப்பும் திருத்தப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஜனநாயகத்திலும், சமூக நீதியிலும் அக்கறை கொண்டுள்ள எல்லா அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் இதுபற்றி சிந்தித்து இத்தகைய தடைக்கற்களை, சமூகநீதி பயணத்தின் படிக்கற்களாக மாற்ற முன்வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
‌ப்ள‌ஸ் 2: நாம‌க்க‌ல் மாண‌வி, செ‌ங்க‌ல்ப‌ட்டு மாணவ‌ன் முத‌லிட‌ம்
ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு : 84.4% பேர் தேர்ச்சி
இலங்கை பிரச்சனைக்கு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு: பிரணாப்
ப்ளஸ் 2 தேர்வு முடிவு: இன்று வெளியீடு
'வ‌ண்டலூ‌ரி‌ல் வ‌ண்ண‌த்து‌ப்பூ‌ச்‌சி பூ‌‌ங்கா'
தா.கி.கொலை: அழகிரி உள்ளிட்ட 13 பேரும் விடுதலை
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace