யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
‌ப்ள‌ஸ் 2: நாம‌க்க‌ல் மாண‌வி, செ‌ங்க‌ல்ப‌ட்டு மாணவ‌ன் முத‌லிட‌ம்
சென்னை (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 9 மே 2008   ( 11:59 IST )
ப்ளஸ் 2 தேர்‌வி‌ல் நாமக்கல் மாணவி தரணி மற்றும் செங்கல்பட்டு மாணவர் ராஜேஷ்குமார் ஆகியோர் 1182 மதிப்பெண்கள் எடுத்து மாநிலத்திலேயே முதலிடத்தை பிடித்துள்ளனர்.

தமிழகத்தில் ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் தமிழை முதல் பாடமாக எடுத்து படி‌த்த நாமக்கல் மாணவி தரணி 1200க்கு 1182 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். செங்கல்பட்டை சேர்ந்த மாணவர் ராஜேஷ்குமாரும் இதே மதிப்பெண்களை பெற்றுள்ளார்.

இதன் மூலம் மாநில அளவில், முதல் இடத்தை இவர்கள் இருவரும் பகிர்ந்துகொண்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மாணவி ரம்யாவும், நாமக்கல் மாணவர் குமார் விக்ரமும் 1200க்கு 1181 மதிப்பெண்களை பெற்று மாநில அளவில் 2வது இடத்தை பிடித்துள்ளனர்.

நாமக்கல்லை சேர்ந்த மாணவி தீபா 1180 மதிப்பெண்கள் பெற்று 3வது இடம் பெற்றுள்ளார்.

தமிழ் அல்லாத வேறு பாடங்களை முதல் பாடமாக எடுத்து பயின்றவர்களில், சென்னை அண்ணாநகரை சேர்ந்த, அண்ணா ஆதர்ஷ் பள்ளி மாணவி ஆஷா கணேஷ் 1200க்கு 1191 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடத்தை பெற்றுள்ளார்.

சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த, எஸ்டிஏபி பள்ளி மாணவர் முரளி கிருஷ்ணன் 1188 மதிப்பெண்கள் பெற்று 2வது இடம் பெற்றுள்ளார்.

டி.ஏ.வி. கோபாலபுரத்தை சேர்ந்த மாணவர் ஹரிஷ் ‌ஸ்ரீராம் 1187 மதிப்பெண்கள் பெற்று 3வது இடத்தை பிடித்துள்ளார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு : 84.4% பேர் தேர்ச்சி
இலங்கை பிரச்சனைக்கு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு: பிரணாப்
ப்ளஸ் 2 தேர்வு முடிவு: இன்று வெளியீடு
'வ‌ண்டலூ‌ரி‌ல் வ‌ண்ண‌த்து‌ப்பூ‌ச்‌சி பூ‌‌ங்கா'
தா.கி.கொலை: அழகிரி உள்ளிட்ட 13 பேரும் விடுதலை
சென்னை வெயிலுக்கு 3 பேர் பலி
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace