யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு : 84.4% பேர் தேர்ச்சி
சென்னை (ஏஜென்சி), 9 மே 2008   ( 10:09 IST )
ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் 84.4 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகம் மற்றும் புதுவையில் ப்ளஸ் 2 தேர்வுகள் கடந்த மார்ச் 3ம் தேதி தொடங்கி, 24ம் தேதி வரை நடைபெற்றது. இதை 5 லட்சத்து 87 ஆயிரத்து 245 மாணவ, மாணவிகள் எழுதினர்.

தனியார் மூலம் தேர்வு எழுதியவர்களையும் சேர்த்து மொத்தம் 6 லட்சத்து 41 ஆயிரத்து 230 பேர் எழுதினர். இதில் மாணவர்கள் 2 லட்சத்து 79 ஆயிரத்து 25 பேர்; மாணவிகள் 3 லட்சத்து 8 ஆயிரத்து 969 பேர்.

இந்த தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகின. பள்ளிகள் மூலம் தேர்வு எழுதியவர்களில் மொத்தம் 84.4 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.

இதில் மாணவர்கள் 81.3 சதவீதமும் (2 லட்சத்து 26 ஆயிரத்து 733 பேர்), மாணவிகள் 87.3 சதவீதமும் (2 லட்சத்து 69 ஆயிரத்து 761 பேர்) தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.

இதில் 60 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற மொத்த மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை 3 லட்சத்து 60 ஆயிரத்து 722 பேர்.

இதில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையில் மாணவ, மாணவிகள் 200க்கு 200 (சென்டம்) மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

அதன்படி, இயற்பியல் பாடத்தில் 282 பேரும், வேதியியல் பாடத்தில் 306 பேரும், உயிரியல் பாடத்தில் 153 பேரும், தாவரவியல் பாடத்தில் 19 பேரும், விலங்கியல் பாடத்தில் ஒருவரும் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

கணக்குப் பாடத்தில் 3, 852 பேரும், கம்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் 60 பேரும், வணிகவியல் பாடத்தில் 148 பேரும், கணக்குப் பதிவியல் பாடத்தில் 739 பேரும், வணிக கணிதம் பாடத்தில் 291 பேரும் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்து சாதனைப் படைத்துள்ளனர்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
இலங்கை பிரச்சனைக்கு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு: பிரணாப்
ப்ளஸ் 2 தேர்வு முடிவு: இன்று வெளியீடு
'வ‌ண்டலூ‌ரி‌ல் வ‌ண்ண‌த்து‌ப்பூ‌ச்‌சி பூ‌‌ங்கா'
தா.கி.கொலை: அழகிரி உள்ளிட்ட 13 பேரும் விடுதலை
சென்னை வெயிலுக்கு 3 பேர் பலி
தடுப்பூசி : 2 மாத குழந்தை கவலைக்கிடம்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace