யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
இலங்கை பிரச்சனைக்கு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு: பிரணாப்
சென்னை (ஏஜென்சி), 9 மே 2008   ( 09:21 IST )
இலங்கை பிரச்சனைக்கு அமைதிப் பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண முடியும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ்க்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கை பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணும்படி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் சமீபத்தில் கடிதம் எழுதியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் ராமதாஸ்க்கு, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி எழுதியுள்ள கடிதம்:

இலங்கையுடனான இந்திய அரசின் செயல்பாட்டில் தமிழக மக்களின் நலனுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதை கருத்தில்கொண்டுதான் 13வது திருத்தத்தை முழுமையாக செயல்படுத்தும் இலங்கை அரசின் நோக்கத்தை முதல் நடவடிக்கை என்று வரவேற்கிறோம்.

இந்திய மீனவர்களை மனித நேயத்துடன் நடத்தும்படியும் இலங்கை கடற்படைக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். அதே நேரத்தில் தமிழக மீனவர்கள் கடல்பகுதியில் சர்வதேச எல்லைக்கோட்டை மதித்து நடக்க வேண்டியது அவசியம்.

இலங்கை இனப்பிரச்சனைக்கு போர் நிரந்தர தீர்வு அல்ல என்பது இந்தியாவின் கொள்கை. அமைதிப்பேச்சு வார்த்தை மூலமே இதற்கு தீர்வு காண முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு : 84.4% பேர் தேர்ச்சி
ப்ளஸ் 2 தேர்வு முடிவு: இன்று வெளியீடு
'வ‌ண்டலூ‌ரி‌ல் வ‌ண்ண‌த்து‌ப்பூ‌ச்‌சி பூ‌‌ங்கா'
தா.கி.கொலை: அழகிரி உள்ளிட்ட 13 பேரும் விடுதலை
சென்னை வெயிலுக்கு 3 பேர் பலி
தடுப்பூசி : 2 மாத குழந்தை கவலைக்கிடம்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace