|
| சென்னை வெயிலுக்கு 3 பேர் பலி |
| சென்னை (ஏஜென்சி), 8 மே 2008 ( 16:03 IST ) | |
சுட்டெரிக்கும் சென்னை வெயிலுக்கு 3 பேர் பலியாகியுள்ளனர்.
தமிழகத்தில் இந்த ஆண்டு கோடைக்காலம் தாமதமாகத்தான் துவங்கியது. எனினும், ஆரம்பத்திலேயே வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது.
இந்நிலையில், கடந்த 3ம் தேதி கத்தரி எனப்படும் அக்னி நட்சத்திரம் ஆரம்பமானது. இதனால் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது.
இதன் காரணமாக, பகல் நேரங்களில் பொதுமக்களில் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது. குளிர்பான கடைகளில் விற்பனை பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மண்டையை பிளக்கும் சென்னை வெயிலுக்கு 3 பேர் பலியாகியுள்ளனர். சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஒரு பெண் உள்பட 2 பேர் வெயிலில் சுருண்டு விழுந்து பலியாகினர்.
டான்டன் சாலையில் சென்றுகொண்டிருந்த ஒருவரும் வெயிலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் மயங்கி விழுந்தார். பின்னர் சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.
இதுதவிர, சென்னையின் இதரப் பகுதிகளிலும் பலர் பலியாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து சுகாதாரத்துறையினர் தகவல்கள் சேகரித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த ஆண்டின் கோடை வெயிலுக்கு நாடு முழுவதும் 74க்கும் அதிகமானோர் பலியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|