யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
தடுப்பூசி : 2 மாத குழந்தை கவலைக்கிடம்
கன்னியாகுமரி (ஏஜென்சி), வியாழக்கிழமை, 8 மே 2008   ( 15:33 IST )
ஆரல்வாய்மொழியில் தடுப்பூசி போடப்பட்ட 2 மாத குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இரு வாரங்களுக்கு முன்பு, திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் தடுப்பூசி போடப்பட்ட 4 குழந்தைகள் பலியாகின. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதன் காரணமாக, தடுப்பூசி போடும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர், பலத்த கண்காணிப்புடன் தடுப்பூசி போடும் பணி தொடரும் என அரசு அறிவித்தது.

அதன்படி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் நேற்று பிசிஜி மற்றும் டிபிடி தடுப்பூசி போடப்பட்டது. இதில் செல்வதர்ஷினி என்ற 2 மாத பெண் குழந்தைக்கும் ஊசி போடப்பட்டது.

அந்த குழந்தைக்கு இரவில் திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டது. வாயில் நுரை தள்ளியதோடு, காது மற்றும் மூக்கு வழியாக ரத்தம் கொட்டியது.

இதனால் குழந்தையின் பெற்றோர் நாகர்கோயில் அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தையை சேர்ந்தனர். அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள அந்த குழந்தையின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ரயில்வே ஊழியராகும் 321 போர்ட்டர்கள்!
இலவசமாக வழங்கப்படும் 46% மின்சாரம்: ஆற்காடு வீராசாமி
முதல் ஹோமத்தை நடத்திய பயிற்சி அர்ச்சகர்கள்
அ‌வினா‌சி-அ‌த்‌தி‌க்கடவு ‌தி‌ட்ட‌‌த்துக்கு அடிக்கல்: துரைமுருக‌ன் உறுதி
கத்திப்பாரா மேம்பாலத்திற்கு நேரு பெயர்: அரசு பரிசீலனை
திருச்சியில் கன மழை
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace