|
| ரயில்வே ஊழியராகும் 321 போர்ட்டர்கள்! |
| சென்னை (ஏஜென்சி), வியாழக்கிழமை, 8 மே 2008 ( 15:16 IST ) | |
ரயில் நிலையங்களில் போர்ட்டர்களாக பணிபுரியும் 321 பேர் ரயில்வே ஊழியர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கான பணி நியமன உத்தரவு வரும் 30ம் தேதி வழங்கப்படுகிறது.
கடந்த ரயில்வே பட்ஜெட்டில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்த ரயில்வே அமைச்சர் லாலு, 'ரயில் நிலையங்களில் போர்ட்டர்களாக பணிபுரிபவர்கள் கேங்மேனாக நியமிக்கப்படுவார்கள்' என்று அறிவித்தார்.
அதன்படி, ரயில்வே போர்ட்டர்களிடம் இருந்த்கு கேங் மேன் பணிக்கு விண்ணப்பங்கள் குவிந்தன. சென்னை ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் மற்றும் செங்கற்பட்டு போன்ற ரயில் நிலையங்களில் மொத்தம் 875 பேர் கேங் மேன் பணிக்காக விண்ணப்பித்திருந்தனர்.
இதில், 18 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்ட, எழுதப்படிக்க தெரிந்த, சுமார் 20 கிலோ எடையுள்ள உபகரணங்களை தூக்கிக்கொண்டு 6 கி.மீ. தூரம் நடந்து செல்லும் உடல் தகுதி பெற்றவர்களை 'கேங்மேன்' பணிக்கு தேர்வு செய்யும் பணி நடைபெற்று வந்தது. அதன்படி, 321 பேர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்களுக்கான மருத்துப் பரிசோதனை முடிந்தது, வரும் 30ம் தேதி பணி நியமன உத்தரவு வழங்கப்படும் என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|