யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
இலவசமாக வழங்கப்படும் 46% மின்சாரம்: ஆற்காடு வீராசாமி
சென்னை (ஏஜென்சி), வியாழக்கிழமை, 8 மே 2008   ( 14:51 IST )
தமிழகத்தில் 46 சதவீத மின்சாரம் இலவச திட்டங்களுக்காக விநியோகம் செய்யப்படுவதாக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் மின்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின்போது, இதுகுறித்து திமுக எம்எல்ஏ முல்லைவேந்தன் மற்றும் அதிமுக கொறடா செங்கோட்டையன் ஆகியோரின் கேள்விகளுக்கு பதிலளித்து ஆற்காடு வீராசாமி பேசியதாவது:

தமிழகத்தின் மொத்த மின்சாரத்தில் 28 சதவீதம் இலவசத் திட்டங்களுக்காக வழங்கப்படுகிறது. விவசாயிகள், குடிசைகள் மற்றும் கைத்தறி நெசவாளர்கள் ஆகியோருக்கு இவை வழங்கப்படுகிறது.

மேலும் 18 சதவீத மின்சாரம் 'லைன் லாஸ்' என்ற அடிப்படையில் காலியாகிவிடுகிறது. இவை போக மீதமுள்ள 54 சதவீத மின்சாரம் மட்டுமே நுகர்வோருக்கு வழங்கப்பட்டு, கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

தமிழகத்தில் இலவச மின்சார இணைப்பு கேட்டு 4 லட்சம் விவசாயிகள் மனு செய்திருக்கின்றனர். ஆனால், ஒரு இலவச மின் இணைப்பு வழங்க ரூ.1 லட்சம் ரூபாய் வரை செலவாவதால், ஆண்டுக்கு 40 ஆயிரம் இணைப்புகள் மட்டுமே வழங்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
முதல் ஹோமத்தை நடத்திய பயிற்சி அர்ச்சகர்கள்
அ‌வினா‌சி-அ‌த்‌தி‌க்கடவு ‌தி‌ட்ட‌‌த்துக்கு அடிக்கல்: துரைமுருக‌ன் உறுதி
கத்திப்பாரா மேம்பாலத்திற்கு நேரு பெயர்: அரசு பரிசீலனை
திருச்சியில் கன மழை
உத்தபுரம் ஜாதிச்சுவரை முழுமையாக அகற்றவும்: திருமா
ஜாதி சுவர் இடிப்பு : கலெக்டர் இன்று பேச்சு வார்த்தை
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace