யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
முதல் ஹோமத்தை நடத்திய பயிற்சி அர்ச்சகர்கள்
8 மே 2008   ( 14:04 IST )
ஸ்ரீரங்கம்: ' அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் ' திட்டத்தின் கீழ் அர்ச்சகர் பயிற்சியை மேற்கொண்ட முதல் குழு அர்ச்கர்கள், ஸ்ரீரங்கம் கோவிலில் தங்களது முதல் ஹோமத்தை நடத்தினர்.

தமிழக அரசு அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. அதன்படி வைணவ மத பூஜை முறைகள் குறித்து ஒரு ஆண்டு பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.

திருச்சியில் நடந்து வந்த இந்த ஒரு ஆண்டு பயிற்சி வகுப்பின் முதல் குழு வகுப்பு முடிவடைந்துள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட பயிற்சி அர்ச்சகர்கள், நேற்று ஸ்ரீரங்கம் ஸ்ரீ கட்டழகிய சிங்கர் கோவிலில் ஸ்ரீரங்கம் ஜீயர் ஸ்ரீரங்க நாராயண ஜீயர் முன்னிலையில், தங்களது முதல் ஹோமத்தை நடத்தினர்.


' உலக அமைதி மற்றும் வளர்ச்சி' க்காக நடத்தப்பட்ட ஸ்ரீசுதர்சன ஹோமத்தை மொத்தம் 30 பயிற்சி அர்ச்சகர்கள், முதன் முதலில் நடத்தினர். தமிழ் மற்றும் சமஸ்கிருதம் என இரு பிரிவுகளாக பிரிந்து இந்த பயிற்சி ஹோமம் நடத்தப்பட்டது.

ஒவ்வொரு பிரிவிலும் 2 மணி நேரத்திற்கு வேத மந்திரங்கள் முழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்து அறநிலையத்துறை இணை இயக்குநரும், ரங்கநாதசுவாமி கோவில் நிர்வாக அதிகாரியுமான கவிதா , இந்த மாத இறுதியில் பயிற்சி அர்ச்சகர்கள் எழுத்துத் தேர்வை எழுதவுள்ளதாக தெரிவித்தார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
அ‌வினா‌சி-அ‌த்‌தி‌க்கடவு ‌தி‌ட்ட‌‌த்துக்கு அடிக்கல்: துரைமுருக‌ன் உறுதி
கத்திப்பாரா மேம்பாலத்திற்கு நேரு பெயர்: அரசு பரிசீலனை
திருச்சியில் கன மழை
உத்தபுரம் ஜாதிச்சுவரை முழுமையாக அகற்றவும்: திருமா
ஜாதி சுவர் இடிப்பு : கலெக்டர் இன்று பேச்சு வார்த்தை
பி.இ.விண்ணப்பங்கள் 10 ம் தேதி விநியோகம்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace