யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
அ‌வினா‌சி-அ‌த்‌தி‌க்கடவு ‌தி‌ட்ட‌‌த்துக்கு அடிக்கல்: துரைமுருக‌ன் உறுதி
சென்னை(ஏஜென்சி), வியாழக்கிழமை, 8 மே 2008   ( 13:53 IST )
'தகுந்த நேரம் வரும்போது அவினாசி-அத்திக்கடவு திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்படும்' என்று பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் உறு‌தியளித்துள்ளார்.

இதுதொடர்பாக சட்ட‌சபையில் இன்றைய கேள்வி நேரத்தின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் கோவிந்தசாமியின் கேள்விகளுக்கு பதிலளித்து அமைச்சர் துரைமுருக‌ன் பேசியதாவது:

அவினாசி-அத்திக்கடவு திட்டம் மிக முக்கியமான திட்டம் என்பதால் இதை எப்படியேனும் நிறைவேற்ற வேண்டும் என்றும், அதற்குரிய வழிமுறைகளை தேடும்படி முதலமைச்சர் கருணாநிதி எனக்கு உத்தரவிட்டுள்ளார்.

காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு பிறகு தண்ணீர் பிரச்சனை தீர்ந்துவிடும் என்று நினைத்தோம். தற்போது ஒகேனக்கல் குடிநீர் திட்டப் பிரச்சனையில் குடிநீருக்காக தண்ணீர் எடுப்பதற்கே கர்நாடக மாநிலத் தலைவர்கள் பிரச்சனை செய்கிறார்கள்.

இந்த அவினாசி-அத்திக்கடவு திட்டத்திற்கு மிகை நீரை தான் நாம் எடுக்கப்போகிறோம். ஆனாலும், இந்த திட்டத்தை இப்போது தொடங்கினால் பிரச்சனைகள் எழும்.

எனவே, இத்திட்டத்தை நிறைவேற்ற கொஞ்சம் காலதாமதம் ஆனாலும், தகுந்த நேரம் பார்த்து அவினாசி- அத்திக்கடவு திட்டத்திற்கு நிச்சயம் அடிக்கல் நாட்டப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
கத்திப்பாரா மேம்பாலத்திற்கு நேரு பெயர்: அரசு பரிசீலனை
திருச்சியில் கன மழை
உத்தபுரம் ஜாதிச்சுவரை முழுமையாக அகற்றவும்: திருமா
ஜாதி சுவர் இடிப்பு : கலெக்டர் இன்று பேச்சு வார்த்தை
பி.இ.விண்ணப்பங்கள் 10 ம் தேதி விநியோகம்
கருணாநிதி விருந்து: அதிமுக, மதிமுக புறக்கணிப்பு
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace