யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
கத்திப்பாரா மேம்பாலத்திற்கு நேரு பெயர்: அரசு பரிசீலனை
சென்னை (ஏஜென்சி), வியாழக்கிழமை, 8 மே 2008   ( 13:44 IST )
சென்னை கத்திப்பாரா சந்திப்பில் கட்டப்பட்டு வரும் புதிய மேம்பாலத்திற்கு முன்னாள் பிரதமர் நேருவின் பெயர் சூட்டுப்படும் என்று தெரிகிறது.

சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது, காங்கிரஸ் உறுப்பினர் ஈ.எஸ்.எஸ்.ராமன், 'கத்திப்பாரா சந்திப்பில் அமைக்கப்பட்டு வரும் புதிய மேம்பாலத்திற்கு, முன்னாள் பிரதமர் நேருவின் பெயரை சூட்டவேண்டும்' என்று கோரிக்கை விடுத்தார்.

இதற்குப் பதிலளித்து பேசிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் கூறியதாவது:

சென்னை, கிண்டியில் உள்ள கத்திப்பாரா சந்திப்பில் பல அடுக்கு புதிய மேம்பாலம் கட்டும் திட்டத்தை மத்திய அரசின் நெடுஞ்சாலைத் துறைதான் நிறைவேற்றி வருகிறது.

எனவே பாலத்திற்கு நேருவின் பெயரை சூட்டுவது தொடர்பாக மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும்.

இதுகுறித்து முதலமைச்சர் கருணாநிதியுடன் ஆலோசனை நடத்தி, மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படும். அதன் பிறகு மேம்பாலத்துக்கு நேருவின் பெயரை சூட்டுவது குறித்து முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
திருச்சியில் கன மழை
உத்தபுரம் ஜாதிச்சுவரை முழுமையாக அகற்றவும்: திருமா
ஜாதி சுவர் இடிப்பு : கலெக்டர் இன்று பேச்சு வார்த்தை
பி.இ.விண்ணப்பங்கள் 10 ம் தேதி விநியோகம்
கருணாநிதி விருந்து: அதிமுக, மதிமுக புறக்கணிப்பு
தா.கிருட்டிணன் கொலை வழக்கு: இன்று தீர்ப்பு
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace