யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
உத்தபுரம் ஜாதிச்சுவரை முழுமையாக அகற்றவும்: திருமா
சென்னை (ஏஜென்சி), வியாழக்கிழமை, 8 மே 2008   ( 12:43 IST )
உத்தபுரத்தில் உள்ள தீண்டாமைச் சுவரை முழுமையாக அகற்ற வேண்டும் என்று ‌விடுதலை‌ச் ‌சிறு‌த்தைக‌ள் க‌ட்‌சி தலைவ‌ர் திருமாவளவன் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ள‌ா‌ர்.

இதுகு‌றி‌த்து அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கை:

மதுரையை அடுத்த உத்தபுரம் கிராமத்தில் 20 ஆண்டுகளாக ஜாதி இந்துக்கள் எழுப்பியிருந்த 150 அடி நீளமும், 10 அடி உயரமும் கொண்ட தீண்டாமைச் சுவரின் 15 அடி நீளம் மட்டுமே தற்போது அகற்றப்பட்டுள்ளது.

தீண்டாமை சுவருக்கு எதிரான குரல்கள் வலிமை பெறுவதைக்கண்டு, இந்த சுவரை எழுப்பியவர்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, தமது குடும்ப அட்டைகளை திரும்ப ஒப்படைக்கும் போராட்டம் நடத்தியது கண்டனத்திற்கு ரியது.

அதோடு, ஜாதி இந்துக்கள் தமது வீடுகளைப் பூட்டிவிட்டு, காட்டுப்பகுதியில் சென்று வெட்டவெளியில் வாழப்போவதாக கூறியிருப்பது மனிதத் தன்மையற்றது.

தீண்டாமை சுவரின் 10ல் ஒரு பங்கான 15 அடி அகற்றியிருப்பது ஒரு சிறிய ஆறுதல் என்றாலும், இந்த சுவரை முழுமையாக அகற்றினால் தான், தீண்டாமை சுவர் இத்தனை ஆண்டுகளாக தலித் மக்களுக்கு ஏற்படுத்திய காயத்தின் வலி ஆறத் தொடங்கும்.

எனவே தீண்டாமைச் சுவரின் எஞ்சிய பகுதியையும் அகற்றிட முதலமைச்சர் கருணாநிதி உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
திருச்சியில் கன மழை
ஜாதி சுவர் இடிப்பு : கலெக்டர் இன்று பேச்சு வார்த்தை
பி.இ.விண்ணப்பங்கள் 10 ம் தேதி விநியோகம்
கருணாநிதி விருந்து: அதிமுக, மதிமுக புறக்கணிப்பு
தா.கிருட்டிணன் கொலை வழக்கு: இன்று தீர்ப்பு
ப்ளஸ் 2 தேர்வு முடிவு: நாளை வெளியீடு
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace