|
| ஜாதி சுவர் இடிப்பு : கலெக்டர் இன்று பேச்சு வார்த்தை |
| மதுரை( ஏஜென்சி), வியாழக்கிழமை, 8 மே 2008 ( 12:25 IST ) | |
தீண்டாமைச்சுவர் இடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தபுரத்தை விட்டு வெளியேறி மலையில் குடியேறியவர்களுடன மாவட்ட ஆட்சித் தலைவர் ஜவஹர் இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ளது உத்தமபுரம்.இங்கு தாழ்த்தப்பட்ட மக்களும் மற்றொரு சமூகத்தினரும் வசித்து வருகின்றனர்.
கடந்த 1989ம் ஆண்டு இரு பிரிவினருக்கும் இடையே நடந்த மோதலில் பலர் பலியாகினர். இதையடுத்து, தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களது பகுதிக்குள் நுழைவதை தடுக்கும் வகையில், மற்றொரு சமூகத்தினர் இரு கிராமங்களுக்கு இடையே நீண்ட தடுப்புச் சுவர் ஒன்றை எழுப்பினர்.
இதனால் தாழ்த்தப்பட்ட மக்கள் பல கிலோ மீட்டர் தொலைவில் சுற்றிக்கொண்டு, அந்த பகுதிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த ஜாதி சுவர் விவகாரம், சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த சுவரை அகற்றும்படி தாழ்த்தப்பட்ட மக்கள் கோரிக்கை எழுப்பினர்.ஆனால், சுவரை இடிக்கக்கூடாது என மற்றொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.தங்கள் ரேஷன் கார்டுகளையும் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.
இந்நிலையில், மாவட்டக் கலெக்டர் ஜவஹர், மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளின் நேரடி கண்காணிப்பில் கடந்த மே 6 ம் தேதியன்று காலை சர்ச்சைக்குரிய அந்த தடுப்புச்சுவரின் ஒரு பகுதி பாதை அமைக்க ஏதுவாக இடிக்கப்பட்டது.
இருதரப்பினரும் சென்று வரும் வகையில், தற்போது பொதுவழிப்பாதை அமைக்கப்பட்டது.
இந்நிலையில், சுவர் இடிக்கப்பட்டதை கண்டித்து ஒரு பிரிவு ஜாதியைச் சேர்ந்தவர்கள் கிராமத்திலிருந்து வெளியேறி அருகிலுள்ள மலைக்குச் சென்று குடியேறியுள்ளனர்.
மீண்டும் தடுப்பு சுவரைக் கட்ட வேண்டும் , மாரியம்மன் கோவில் நிலத்திற்குப் பட்டா தர வேண்டும், 89ம் ஆண்டு ஜாதிக் கலவரத்தின்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக வீடு கட்டித் தர வேண்டும் என்பது உள்ளிட்ட ஐந்து நிபந்தனைகளை அவர்கள் விதித்து இன்று மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டத்தை தொடருகின்றனர்.
இந்நிலையில், இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஜவஹர் மலைக்கு சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|