யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
பி.இ.விண்ணப்பங்கள் 10 ம் தேதி விநியோகம்
சென்னை(ஏஜென்சி), வியாழக்கிழமை, 8 மே 2008   ( 11:53 IST )
அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் இதர கல்வி நிறுவனங்களுக்கான பொறியியல் படிப்பு (பி.இ.) மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வருகிற 10 ம் தேதி முதல் விநியோகிக்கப்படவுள்ளன.

பிளஸ் டூ தேர்வு முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில் பி.இ. விண்ணப்பங்கள் , நாளை மறுதினம் 10ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது.1 லட்சத்து 40 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகத்திற்குத் தயாராக உள்ளன.

தமிழகத்தில் அரசு பொறியியல் கல்லூரிகள் உள்பட 260 கல்லூரிகள் உள்ளன. இவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மட்டும் 65 ஆயிரம் ஆகும். நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் 38 ஆயிரம் இடங்கள் உள்ளன. இந்த ஆண்டும் மேலும் பல பொறியியல் கல்லூரிகள் செயல்படவுள்ளன. எனவே இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாகும் என தெரிகிறது.

இந்த நிலையில் பி.இ. விண்ணப்பங்களை 10 ம் தேதி முதல் சென்னை, கோவை, திருச்சி, நெல்லை அண்ணா பல்கலைக்கழகங்களிலும், அரசு பொறியியல் கல்லூரிகளிலும், அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளிலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக்குகளிலும் விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மொத்தம் 15 கவுண்டர்கள் மூலம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும்.

500 ரூபாய் கட்டணம் செலுத்தி நேரடியாக விண்ணப்பத்தைப் பெறலாம்.அல்லது டிடி மூலமாகவும், விண்ணப்பத்தைப் பெறலாம்.ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ. 250க்கு விண்ணப்பம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
கருணாநிதி விருந்து: அதிமுக, மதிமுக புறக்கணிப்பு
தா.கிருட்டிணன் கொலை வழக்கு: இன்று தீர்ப்பு
ப்ளஸ் 2 தேர்வு முடிவு: நாளை வெளியீடு
சென்னை : வணிக வளாகத்தில் தீ விபத்து
'ஒகேனக்கல் : கருணாநிதி செயல் மன்னிக்க முடியாத துரோகம்'
"செ‌ன்னை‌ வெப்ப நிலை 42 டிகிரி செல்சியஸை எட்டும் "
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace