|
| கருணாநிதி விருந்து: அதிமுக, மதிமுக புறக்கணிப்பு |
| சென்னை (ஏஜென்சி), வியாழக்கிழமை, 8 மே 2008 ( 10:03 IST ) | |
தமிழக சட்டசபை உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் கருணாநிதி விருந்தளித்தார்.
தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 14ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி, சட்டசபை உறுப்பினர்களுக்கு சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றில் முதலமைச்சர் கருணாநிதி விருந்தளித்தார்.
இதில் சபாநாயகர் ஆவுடையப்பன், காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, இந்திய கம்யூனிஸ்ட் தேசியக் குழு உறுப்பினர் நல்லகண்ணு, ஆர்.எம்.வீரப்பன், அமைச்சர்கள் அன்பழகன், மு.க. ஸ்டாலின், வீரபாண்டி ஆறுமுகம் ஆகியோர், முதல்வர் கருணாநிதியுடன் ஒரே வரிசையில் அமர்ந்து விருந்து சாப்பிட்டனர்.
மத்திய அமைச்சர் ராதிகா செல்வி, அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன், காங்கிரஸ் சட்டசபை தலைவர் சுதர்சனம், பீட்டர் அல்போன்ஸ், பாமக சட்டசபை தலைவர் ஜி.கே.மணி, மார்க்சிஸ்ட் உறுப்பினர் கோவிந்தசாமி, இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் சிவபுண்ணியம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் உயர்போலீஸ் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த விருந்தில், சூப், சிக்கன் பிரியாணி, பிஷ் பிரை, நான், புலாவ், பரோட்டா, சாதம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட ருசியான உணவு வகைகள் பறிமாறப்பட்டன.
இந்த விருந்தை அதிமுக மற்றும் மதிமுக உறுப்பினர்கள் புறக்கணித்தனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|