|
| 8 தொழில் நுட்ப பூங்காவுக்கு 160 ஏக்கர் நிலம் : கருணாநிதி ஆணை |
| சென்னை( ஏஜென்சி), 1 மே 2008 ( 16:48 IST ) | |
தகவல் தொழில் நுட்பப் பூங்காக்களில் தொழில் நிறுவனங்களை அமைக்க முன்வந்துள்ள புகழ்வாய்ந்த 8 தகவல் தொழில்நுட்பத் தொழில் நிறுவனங்களுக்கு உரிய நிலஒதுக்கீட்டு ஆணைகளை தமிழக முதலமைச்சர் கருணாநிதி இன்று வழங்கினார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
சென்னை மாநகரப் பகுதிகளில் மட்டுமல்லாமல் தமிழகத்தின் இரண்டாம் நிலை நகரங்களிலும் தகவல் தொழில் நுட்பத்தொழிற் பூங்கா அமைக்கும் தமிழக அரசின் கொள்கைப் படி, மதுரை, கோவை, நெல்லை, திருச்சி, சேலம் முதலிய பல்வேறு நகரங்களிலும் தகவல் தொழில் நுட்பப் பூங்காக்கள் அமைக்கப்படுகின்றன.
மதுரை, திருநெல்வேலி, திருச்சி ஆகிய நகரங்களிலும், காஞ்சிபுரம் மாவட்டம் சோழிங்கநல்லூரிலும், எல்காட் நிறுவனம் உருவாக்கியுள்ள தகவல் தொழில் நுட்பப் பூங்காக்களில் தொழில் நிறுவனங்களை அமைக்க முன்வந்துள்ள புகழ்வாய்ந்த 8 தகவல் தொழில்நுட்பத் தொழில் நிறுவனங்களுக்கு உரிய நிலஒதுக்கீட்டு ஆணைகளை முதலமைச்சர் கருணாநிதி இன்று தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.
அதன்படி, எச்.சி.எல். டெக்னா லஜிஸ் நிறுவனத் திற்கு மதுரை இலந்தைகுளம் தகவல் தொழில்நுட்பத் தொழிற்பூங்காவில் 5 ஏக்கர் நிலமும், மதுரை வடபழஞ்சி தகவல் தொழில்நுட்பத் தொழிற்பூங்காவில் 60 ஏக்கர் நிலமும், சதர் லேண்ட் குளோபல் சர்வீசஸ் நிறுவனத்திற்கு மதுரை வடபழஞ்சி தகவல் தொழில்நுட்பத் தொழிற்பூங்காவில் 5 ஏக்கர் நிலமும், திருச்சி நவல்பட்டு தகவல் தொழில்நுட்பத் தொழிற்பூங்காவில் 10 ஏக்கர் நிலமும், திருநெல்வேலி கங்கைகொண்டான் தக வல் தொழில்நுட்பத் தொழிற்பூங்காவில் 10 ஏக்கர் நிலமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் ஹனிவேல் இண்டர்நேஷனல் இந் தியா நிறுவனத்திற்கு மதுரை இலந்தைகுளம் தகவல் தொழில்நுட்பத் தொழிற்பூங்காவில் 5 ஏக்கர் நிலமும், டெசால்வ் சர் வீசஸ் நிறுவனத்திற்கு மதுரை இலந்தைகுளம் தகவல் தொழில்நுட்பத் தொழிற்பூங்காவில் 2.5 ஏக்கர் நிலமும், சத்யம் கம்ப்ïட்டர்ஸ் நிறுவனத்திற்கு மதுரை, வடபழஞ்சி தகவல் தொழில்நுட்பத் தொழிற்பூங்காவில் 50 ஏக்கர் நிலமும் கொடுக்கப்படுகிறது.
இது தவிர சிபி நிறு வனம், சதர்லேண்ட் குளோ பல் சர்வீசஸ், காக்னி சண்ட் டெக்னாலஜி சொலு ïசன்ஸ் இந்தியா, ஸ்கோப் இன்டர் நேஷனல் ஆகிய நான்கு நிறுவனங்களுக்கும் காஞ்சிபுரம் மாவட்டம், சோழிங்கநல்லூர் தகவல் தொழில்நுட்பத் தொழிற் பூங்காவில் மொத்தம் 61.97 ஏக்கர் நிலமும் ஒதுக்கீடு செய் யப்பட்டு அவற்றுக்குரிய நில ஒதுக்கீட்டு ஆணைகள் இன்று வழங்கப்பட்டன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|