|
| குஷ்பு மீதான 26 வழக்குகளை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு |
| சென்னை(ஏஜென்சி), வியாழக்கிழமை, 1 மே 2008 ( 14:22 IST ) | |
நடிகை குஷ்பு மீதான 26 வழக்குகளை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
கடந்த 2005-ம் ஆண்டு நடைபெற்ற `எய்ட்ஸ்' விழிப்புணர்வு கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.அப்போது சில கருத்துக்களை தெரிவித்தார். அவர் பேசிய பேச்சு தமிழ் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது என்றும், பல்வேறு கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது தொடர்பாக தமிழ்நாட்டில் உள்ள 26 நீதிமன்றங்களில் அவர் மீது அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த 26 வழக்குகளையும் ரத்து செய்யவேண்டுமென்று, குஷ்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதுதவிர, மேட்டூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு வழங்கிய ஜாமீன் நிபந்தனையை தளர்த்த வேண்டுமென்று குஷ்பு இன்னொரு மனுவை தாக்கல் செய்தார்.
இந்த மனுக்களை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.ரகுபதி விசாரித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தனது தீர்ப்பில் கூறியதாவது:
குஷ்பு பேசியது அவதூறாக எடுத்துக்கொண்டால் கூட, பல கேள்விகளை காணும் நிலையில்தான் வழக்கு உள்ளது. அவர் சொன்ன கருத்துக்கள் நல்ல நோக்கத்தில் பேசப்பட்டதா, எந்த சூழ்நிலையில் பேசப்பட்டது, எந்த நோக்கத்திற்காக பேசப்பட்டது என்ற கேள்விகளுக்கு விடைகாண வேண்டும்.
சாட்சி விசாரணையின்போது தான் இக்கேள்விகளுக்கு விடை கிடைக்கும். ஆகவே, அவர் மீது தொடரப்பட்ட வழக்குகளை விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது.
இந்த வழக்கை பொறுத்தவரை குற்றச்சாட்டுக்கு அடிப்படை முகாந்திரம் உள்ளது. மாஜிஸ்திரேட்டு வழக்கு தொடர்பாக விமர்சிக்கக்கூடாது என்று நிபந்தனை விதித்த பிறகும், குஷ்பு தன்னால் கட்டுப்பட்டு இருக்க முடியவில்லை. இவர் மீது வெவ்வேறு கோர்ட்டில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எல்லா வழக்குகளும் ஒரே மாதிரியாக உள்ளது. ஆகவே, எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்கலாம். ஆகவே, இந்த வழக்குகள் அனைத்தையும் எழும்பூர் தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும். அக்கோர்ட்டு 6 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும்.
இவ்வாறு தீர்ப்பில் நீதிபதி கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|