|
| தமிழகத்திற்குள் ஊடுருவ கருணா பிரிவினர் முயற்சி |
| சென்னை(ஏஜென்சி), வியாழக்கிழமை, 1 மே 2008 ( 13:57 IST ) | |
விடுதலைப் புலிகளுக்கு அவப் பெயரை ஏற்படுததும் நோக்கில் தமிழகத்திற்குள் ஊடுறுவி, முக்கியத் தலைவர்களைக் கடத்த கருணா குழுவினர் முயற்சி மேற்கொண்டுள்ளதாக தமிழக போலீஸை மத்திய உளவுப் பிரிவான ஐபி எச்சரித்துள்ளது.
விடுதலைப் புலிகளிடமிருந்து பிரிந்து தனியாக பிரிந்து சென்ற கருணாம், இலங்கை ராணுவத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
புலிகளை காட்டிக் கொடுத்ததற்கு பரிசாக , இலங்கை ராணுவத்தின் பாதுகாப்பில் கடந்த ஆண்டு அவர் லண்டனுக்குத் தப்பிச் சென்றார். ஆனால் அங்கு போலி பாஸ்போர்ட் வழக்கில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் கருணா பிரிவினர் தமிழகத்திற்குள் ஊடுறுவ முயற்சி மேற்கொண்டுள்ளதாகவும், இங்குள்ள முக்கிய தலைவர்களைக் கடத்தத் திட்டமிட்டு வருவதாகவும் மத்திய உளவுப் பிரிவான (ஐபி) தமிழக காவல் துறையை எச்சரித்துள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கத்தில் , இந்த சதிச் செயலுக்கு அவர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் ஐபி எச்சரித்துள்ளது.
தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்துமாறும், குறிப்பாக விடுதலைப் புலிகளை எதிர்க்கும் அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோருக்கு பாதுகாப்பை பலப்படுத்துமாறும் தமிழக காவல்துறையை , ஐபி அறிவுறுத்தியுள்ளது.
இலங்கை ராணுவத்தின் சதித் திட்டத்தின்படியே அவர்கள் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|