|
| இலங்கை மீனவர்கள் 15 பேர் கைது |
| சென்னை(ஏஜென்சி), வியாழக்கிழமை, 1 மே 2008 ( 13:32 IST ) | |
இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி புகுந்த இலங்கை மீனவர்கள் 15 பேரை இந்திய கடலோர காவல் படை கைது செய்தது.
இந்திய கடலோர காவல் படையினர், கடந்த 28-ந் தேதி இரவு சென்னையில் இருந்து 350 கிலோ மீட்டர் தொலைவில் இந்திய கடலோர எல்லை அருகே கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, இந்திய கடல் எல்லைக்குள் இலங்கை மீனவர்கள் 3 விசைப்படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருப்பதை அவர்கள் பார்த்தனர்.
அங்கு விரைந்து சென்ற கடலோர காவல் படையினர் விசைப்படகுகளில் இருந்த 15 இலங்கை மீனவர்களையும் சுற்றி வளைத்து பிடித்தனர்.அவர்களின் விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
மீனவர்களையும் பறிமுதல் செய்த விசைப்படகுகளையும் கடலோர காவல் படையினர் நேற்று சென்னை துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் மீனவர்களிடம் விசாரணையும் மேற்கொண்டனர்.
இதன் பின், இலங்கை மீனவர்கள் 15 பேரும் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்கள். இதைத் தொடர்ந்து அவர்கள் 15 பேரையும் போலீசார் கைது செய்தனர்.காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர்களிடம் தீவிர விசாரணையும் நடத்தப்பட்டது.
இந்நிலையில், கலெக்டர் தலைமையில் உள்ள கூட்டு நடவடிக்கை குழு முன்பு இவர்களை ஆஜர்படுத்தப்பட்டனர்.அவர்கள் எடுக்கும் முடிவை பொறுத்தே இவர்களை விடுதலை செய்வது குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|