|
| இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு சட்டசபையில் பாராட்டு |
| சென்னை(ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 29 ஏப்ரல் 2008 ( 18:34 IST ) | |
பி.எஸ்.எல்.வி-சி9 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தமிழக சட்டசபையில் இன்று பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் சபாநாயகர் ஆவுடையப்பன் இது தொடர்பாக கூறியதாவது :
இந்திய விண்வெளி ஆய்வில் ஒரு சாதனையாக பி.எஸ்.எல்.வி ராக்கெட் பத்து செயற்கைக்கோள்களை ஒரே நேரத்தில் விண்ணில் செலுத்தி உள்ளது.
இந்த மாபெரும் சாதனைக்கு காரணமான இஸ்ரோ தலைவர், விஞ்ஞானிகளுக்கு முதலமைச்சரின் சார்பாகவும், அனைவரின் சார்பாகவும் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.அப்போது உறுப்பினர்கள் மேஜையை தட்டி தங்களது பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|