யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பா.ஜ. தயார் : ராஜ்நாத் சிங்
சென்னை(ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 29 ஏப்ரல் 2008   ( 18:13 IST )
அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பா.ஜனதா கட்சி யாராஇருப்பதாகவும், அதற்கான கதவுகள் திறந்தே இருப்பதாகவும் அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

காரைக்குடியில் நடைபெறும் விழா ஒன்றில் பங்கேற்பதற்காக அங்கு செல்லும் வழியில் இன்று சென்னை வந்த ராஜ்நாத் சிங்,
செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :

பா.ஜனதா கூட்டணியில் சேர அதிமுக தயாராக இருந்தால் நாங்களும் தயாராகவே இருக்கிறோம். அதற்காக எங்கள் கதவுகள் திறந்தே இருக்கின்றன.

இலங்கை பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டு இரு தரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்.

முந்தைய பா.ஜனதா ஆட்சியில்தான் ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக முழு உண்மையையும் அறிய பல்வேறு பிரிவினர் அடங்கிய குழு அமைத்தோம்.அப்போது எங்கள் கூட்டணியில் திமுகவும் இருந்தது.இதனால் அந்த விசாரணை முறையாக நடக்கவில்லை என்று சோனியா காந்தி குறை கூறினார்.

இப்போது சோனியா முழு அதிகாரத்தில் இருக்கிறார். இதுவரை அந்த குழு பற்றி வாயே திறக்கவில்லை.அந்தக் குழுவின் விசாரணை முன்னேற்றம் குறித்த விவரங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும்.

ராமர் பாலம் என்பது கோடிக்கணக்கான இந்துக்கள் நம்பிக்கை சம்பந்தப்பட்டது. எனவே அதற்கு எவ்வித பாதிப்பும் வராமல் சேது சமுத்திரம் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என தமிழக முதலமைச்சரை நான் கேட்டுக்கொள்கிறேன்.இதற்கு எங்கள் கட்சியும் முழு ஒத்துழைப்பு தரும்.

மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு மீது எழுந்துள்ள சர்ச்சை தொடர்பான தனது நிலை குறித்து பிரதமர் மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தெளிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் பிரச்சினையில் கர்நாடகாவில் புதிய அரசு பதவியேற்றதும் சுமூகத் தீர்வு காண முடியும்.

நாங்கள் ஆட்சியில் இருந்தபோது அரிசி மற்றும் கோதுமையை தேவையான அளவு கையிருப்பில் வைத்திருந்தோம். இதனால் உணவு தட்டுப்பாடு ஏற்படவில்லை. இப்போது ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வுக்கும், பண வீக்கத்துக்கும், உணவு தானிய தட்டுப்பாட்டுக்கும் மத்திய அரசே முழுப் பொறுப்பேற்க வேண்டும்.

இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
செ‌ன்னை ‌விமான ‌நிலைய‌த்‌தி‌ல் ரூ.2 கோடி ஹெரா‌யி‌ன் ப‌றிமுத‌ல்
தடுப்பூசி : குழந்தைகள் சாவை தடுக்க மார்க்சிஸ்ட் வ‌லியுறு‌த்த‌ல்
தாராபுரம் அருகே சாலை விபத்தில் 5 பேர் ப‌லி
'பா.ஜ. முழு அடைப்பு போராட்டம் : கடையடைப்பு இல்லை'
இந்திய தண்ணீரை குடிக்க மறுக்கவில்லை : ஜாக்கி சான்
போலி இடமாற்ற உத்தரவு : கல்வி அதிகாரி கைது
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace