|
| சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடி ஹெராயின் பறிமுதல் |
| சென்னை(ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 29 ஏப்ரல் 2008 ( 15:01 IST ) | |
சென்னை விமான நிலையத்தில் பிலைப்பைன்ஸ் நாட்டு பயணியிடமிருந்து இருந்து 2.7 கிலோ ஹெராயினை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி, அந்த பயணியை கைது செய்தனர்.
டெல்லியில் இருந்து இன்று சென்னை விமான நிலையம் வந்த பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ராஷல் டேக் விங்க் (35) என்ற பயணி மீது வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து அந்த பயணியிடம் சோதனை நடத்தினர்.
அப்போது, அவரது சூய்கேஸினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த பாலிதீன் பையில் 2.7 கிலோ ஹெராயின் இருப்பதை கண்டுபிடித்தனர்.இந்த ஹெராயின் சர்வதேச மதிப்பு ரூ.2.7 கோடியாகும்.
அவற்றை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர் அவரை கைது செய்தனர்.விசாரணையில், அந்த பயணி கோலாலம்பூரில் இருந்து பிலிப்பைன்ஸ் செல்ல வந்தது தெரிந்தது.
இதனிடையே திருவாரூரை சேர்ந்த அழகேசன் (30) என்பவர் சூட்கேசில் வைத்து கடத்திய கேட்டமைன் ஹைட்ரோகுளோரைட் என்ற போதை பவுடரை சுங்கத்துறையினர் கைப்பற்றினர்.சர்வதேச அளவில் இவற்றின் மதிப்பு ஒரு கோடி ரூபாய் ஆகும்.
கைதான இரண்டு பேரும் விமான நிலைய காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|