யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
தடுப்பூசி : குழந்தைகள் சாவை தடுக்க மார்க்சிஸ்ட் வ‌லியுறு‌த்த‌ல்
சென்னை(ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 29 ஏப்ரல் 2008   ( 14:54 IST )
எதிர்காலத்தில் தடுப்பூசியால் குழந்தைகள் சாவதை தடுக்கும் உத்திரவாதமான நடவடிக்கைகளை தமிழக மேற்கொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் என்.வரதராஜன் வலியுறுத்தியுள்ளார்.

இது கு‌றி‌த்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டபோது திருவள்ளூரில் 4 குழந்தைகளும், திண்டுக்கல்லில் ஒரு குழந்தையும், தர்மபுரியில் ஒரு குழந்தையும் இறந்துவிட்டன. மேலும், சில குழந்தைகள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிர்காக்கும் நோய் தடுப்பு மருந்தே உயிரைப்பறிக்கும் கொடூரம் அனைவரையும் உலுக்கியது. குழந்தைகளை பறிகொடுத்த குடும்பத்தினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறது.

தடுப்பூசி போடப்பட்ட 6 குழந்தைகள் இறந்ததற்கான காரணத்தை ஆய்வு செய்து, எதிர் காலத்தில் இத்தகைய இழப்பு ஏற்படாமல் இருக்க உத்திரவாதமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய - மாநில அரசுகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு வலியுறுத்துகிறது.

இவ்வாறு அவர் அதில் கூ‌றியு‌ள்ளா‌ர்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
தாராபுரம் அருகே சாலை விபத்தில் 5 பேர் ப‌லி
'பா.ஜ. முழு அடைப்பு போராட்டம் : கடையடைப்பு இல்லை'
இந்திய தண்ணீரை குடிக்க மறுக்கவில்லை : ஜாக்கி சான்
போலி இடமாற்ற உத்தரவு : கல்வி அதிகாரி கைது
'தடுப்பூசி : கிராம செவிலியர்களுக்கு தடை இல்லை'
திருமாவளவனுக்கு நீதிமன்றம் பிடிவாரன்ட்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace