|
| 'பா.ஜ. முழு அடைப்பு போராட்டம் : கடையடைப்பு இல்லை' |
| சென்னை(ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 29 ஏப்ரல் 2008 ( 12:55 IST ) | |
விலைவாசி உயர்வை எதிர்த்து வருகிற மே 2 ஆம் தேதியன்று பா.ஜனதா அழைப்பு விடுத்துள்ள முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என தமிழ்நாடு வணிகர் சங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :
மே 2 ஆம் தேதி நடக்கும் கடையடைப்பு போராட்டத்திற்கு நாங்கள் ஆதரவு கொடுக்கிறோம்.ஆனால் கடைகளை அடைத்து ஆதரவு கொடுக்க முடியாது.அன்றைய தினம் எல்லா கடைகளும் திறந்து இருக்கும்.மாநாட்டுக்காக 5ஆம் தேதி கடையடைப்பு நடத்த இருப்பதால் நாங்கள் இந்த போராட்டத்தில் பங்கு கொள்ள முடியாத நிலையில் இருக்கிறோம்.இதை நாங்கள் தெரியப்படுத்தியிருக்கிறோம்.
வணிகர் தின வெள்ளிவிழாவையொட்டி மே 5ஆம் தேதி சென்னை தீவுத்திடலில் வணிகர் சங்க மாநாடு நடைபெறுகிறது.இந்த மாநாடு விலைவாசி உயர்வு எதிர்ப்பு மாநாடாக நடத்தப்படும். இதனால் தமிழகம் முழுவதும் மே 5ஆம் தேதி கடைகள், ஓட்டல்கள் அடைக்கப்பட்டு இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|