யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
போலி இடமாற்ற உத்தரவு : கல்வி அதிகாரி கைது
திண்டுக்கல்(ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 29 ஏப்ரல் 2008   ( 12:23 IST )
சென்னை தொடக்கக் கல்வித்துறை இயக்குநரின் கையெழுத்தை போலியாக போட்டு, போலி இடமாற்ற உத்தரவைப் பிறப்பித்த வழக்கில் திண்டுக்கல் மாவட்ட உதவி தொடக்கக் கல்வி அதிகாரி கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப் பள்ளியில் பணியாற்றிய 8 ஆசிரியைகள் மற்றும் ஒரு ஆசிரியர் ஆகியோர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் இடமாறுதலாகிச் சென்றனர்.

இதில் 8 ஆசிரியைகளும் இடமாறுதலாகிச் சென்ற நிலையில், ஆசிரியர் மட்டும் பணியில் சேருவது தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தில் விசாரிக்கச் சென்றார்.

அப்போது அவருடைய பணி இடமாறுதல் உத்தரவைப் பார்த்த அங்குள்ள அதிகாரிகள், அதில் இடம் பெற்றிருந்த தொடக்கக் கல்வி இயக்குநரின் கையெழுத்து போலியானது என்பதை கண்டறிந்தனர்.

இதையடுத்து இடமாறுதலுக்குள்ளான 9 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில், இது குறித்து மாவட்ட கல்வி அதிகாரி, போலீஸில் புகார் கொடுத்தார்.

புகாரின்பேரில் நடந்த விசாரணையில், நத்தம் யூனியன் உதவி தொடக்க கல்வி அதிகாரி குருசண்முகம், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலக தட்டச்சாளர் தமிழரசி, திண்டுக்கல் டிராவல்ஸ் நிறுவன அதிபர் சுரேஷ்குமார் ஆகியோருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து இவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.அவர்கள் நேற்று குருசண்முகத்தை கைது செய்தனர். தமிழரசியும், சுரேஷ்குமாரும் தப்பிவிட்டனர். அவர்களை போலீஸார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
'தடுப்பூசி : கிராம செவிலியர்களுக்கு தடை இல்லை'
திருமாவளவனுக்கு நீதிமன்றம் பிடிவாரன்ட்
பிரதமரின் மெளனத்தால் சந்தேகம் வலுக்கிறது : பா.ஜ.
பி.எஸ்.எல்.வி. வெற்றி : விஞ்ஞானிகளுக்கு கருணாநிதி பாராட்டு
இன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம்
என்கவுன்டர் : விசாரணை கமிஷன் அமைக்க ராமதாஸ் கோரிக்கை
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace