யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
'தடுப்பூசி : கிராம செவிலியர்களுக்கு தடை இல்லை'
சென்னை(ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 29 ஏப்ரல் 2008   ( 12:16 IST )
கிராம செவிலியர்கள் தடுப்பூசி போட தடை ஏதும் விதிக்கப்படவில்லை என்றும் , அவர்கள் மருத்துவர்களின் மேற்பார்வையில் தடுப்பூசி போடுவார்கள் என்றும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

சமீபத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் தட்டம்மை தடுப்பூசி போடப்பட்ட நான்கு குழந்தைகள் இறந்ததையடுத்து,
தடுப்பூசி போடுவது தொடர்பாக சில புதிய கட்டுப்பாடுகளை அரசு நேற்று அறிவித்தது.

அதன்படி கிராம செவிலியர்கள் இனிமேல் தடுப்பூசி போட மாட்டார்கள் என்றும், டாக்டர்கள்தான் அப்பணியைச் செய்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால அப்படி தடை ஏதும் விதிக்கப்படவில்லை என தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.இது தொடர்பாக அரசு பொது சுகாதாரத் துறை மற்றும் நோய்த் தடுப்புத் துறை இயக்குநர் டாக்டர் பத்மநாபன் கூறியதாவது :

தடுப்பூசி போடும் திட்டத்திலிருந்து கிராம செவிலியர்களை நீக்கவில்லை.அவர்கள், மருத்துவ அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் தடுப்பூசி போடுவார்கள்.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள டாக்டர்களின் நேரடி மேற்பார்வையில் இனி அவர்கள் தடுப்பூசி போடுவார்கள்.
இனிமேல் புதன்கிழமை தோறும் தடுப்பூசி முகாம் நடைபெறும்.

திருவள்ளூரில் நான்கு குழந்தைகள் இறந்ததற்கு என்ன காரணம் என்பது இமாச்சலப் பிரதேச ஆய்வகத்தின் முடிவைப் பொறுத்துதான் தெரிய வரும்.அந்த ஆய்வு முடிவு வந்த பிறகே இறப்புக்கான காரணத்தை கூற முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
திருமாவளவனுக்கு நீதிமன்றம் பிடிவாரன்ட்
பிரதமரின் மெளனத்தால் சந்தேகம் வலுக்கிறது : பா.ஜ.
பி.எஸ்.எல்.வி. வெற்றி : விஞ்ஞானிகளுக்கு கருணாநிதி பாராட்டு
இன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம்
என்கவுன்டர் : விசாரணை கமிஷன் அமைக்க ராமதாஸ் கோரிக்கை
திருச்சி அருகே சாலை விபத்தில் 3 பேர் பலி
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace