யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
திருமாவளவனுக்கு நீதிமன்றம் பிடிவாரன்ட்
சிதம்பரம்(ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 29 ஏப்ரல் 2008   ( 11:18 IST )
வன்முறையைத் தூண்டும் விதமாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவனுக்கு எதிராக நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது.

கடந்த 1997 ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி, கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே உள்ள குமாரக்குடி என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவரது பேச்சு வன்முறையைத் தூண்டும் வகையில் இருந்ததாக கூறி போலீஸார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கு சிதம்பரம் துணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கு விசாரணையின்போது திருமாவளவன் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்து வந்தார்.

இந்நிலையில், நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோதும் திருமாவளவன் வரவில்லை.இதையடுத்து கோபமுற்ற மாஜிஸ்திரேட் பிரகாசன், திருமாவளவனை கைது செய்து ஆஜர்படுத்துமாறு போலீஸாருக்கு உத்தரவிட்டார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பிரதமரின் மெளனத்தால் சந்தேகம் வலுக்கிறது : பா.ஜ.
பி.எஸ்.எல்.வி. வெற்றி : விஞ்ஞானிகளுக்கு கருணாநிதி பாராட்டு
இன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம்
என்கவுன்டர் : விசாரணை கமிஷன் அமைக்க ராமதாஸ் கோரிக்கை
திருச்சி அருகே சாலை விபத்தில் 3 பேர் பலி
தமிழகத்தில் 'மினி எமர்ஜென்சி'யா ? : கருணாநிதி பதில்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace