யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
பி.எஸ்.எல்.வி. வெற்றி : விஞ்ஞானிகளுக்கு கருணாநிதி பாராட்டு
சென்னை (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 29 ஏப்ரல் 2008   ( 09:57 IST )
10 செயற்கை கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது, நம் விண்வெளித் துறையின் மகத்தான உலக சாதனை என்று முதல்வர் கருணாநிதி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரே விண்கலத்தின் மூலம் 10 செயற்கைக்கோள்களை ஏந்திச் சென்று புதிய உலக சாதனை படைத்துள்ளது இந்தியத் திருநாட்டின் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் புதிய சாதனையைப் படைத்துள்ளதன் மூலம் இந்தியத் திருநாட்டின் மதிப்பை உலக அரங்கில் உயர்த்தி நிறுத்தியுள்ள விண்வெளியியல் துறை மேதைகளாகிய இஸ்ரோ நிறுவனத்தின் தலைவர் மாதவன் நாயர், இந்தத் திட்டத்தின் தலைவர் ஜார்ஜ் கோஷி, இதில் பங்காற்றிய விண்வெளித்துறை அறிஞர்கள், பணியாளர்கள் அனைவருக்கும் தமிழக அரசின் சார்பில் பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்து மகிழ்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்திக்கும், பிரதமர் மன்மோகன்சிங்குக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாக முதல்வர் கருணாநிதி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
இன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம்
என்கவுன்டர் : விசாரணை கமிஷன் அமைக்க ராமதாஸ் கோரிக்கை
திருச்சி அருகே சாலை விபத்தில் 3 பேர் பலி
தமிழகத்தில் 'மினி எமர்ஜென்சி'யா ? : கருணாநிதி பதில்
கொடநாடு எஸ்டேட் : சப் கலெக்டர் உத்தரவு ரத்து
இந்து கடவுளுக்கு எதிராக யாரையும் தூண்டவில்லை : கருணாநிதி
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace