|
| என்கவுன்டர் : விசாரணை கமிஷன் அமைக்க ராமதாஸ் கோரிக்கை |
| சென்னை (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 29 ஏப்ரல் 2008 ( 08:53 IST ) | |
மோதல் கொலைகள் (என்கவுன்டர்) சம்பவங்களைத் தடுக்க தனி விசாரணை ஆணையத்தை அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் 1998 முதல் 2008 வரை 67 பேர் மோதல் கொலையில் கொல்லப்பட்டுள்ளதாகவும், திருச்சியில் நடந்த சம்பவத்தையும் சேர்த்தால் இந்த எண்ணிக்கை 68 ஆகியுள்ளதாகவும் தெரிவித்தார்.
கொல்லப்பட்டவர்கள் அனைவரும் தேடப்பட்டு வந்த ரவுடிகள், நக்சலைட்டுகள் என போலீசார் கூறுவது போல் இருந்தாலும், அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தி, முறையாக விசாரித்து தண்டனை பெற்றுத்தர வேண்டுமே தவிர, போலீசாரே இப்படி தண்டனை அளிப்பது மனித உரிமைகளுக்கு எதிரானது மட்டுமல்ல சட்டத்திற்கு புறம்பானதும் கூட ஏன்று அவர் கூறினார்.
மோதல் கொலையில் ஈடுபடும் போலீசார் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என மனித உரிமை ஆணையம் வலியுறுத்தியுள்ளது நியாயமானது என்ற அவர், சட்ட பாதுகாப்பு இருப்பதால்தான் மோதல் கொலைகளில் அதிகாரிகள் துணிச்சலாக ஈடுபடுகிறார்கள் என்றும், எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்களைத் தடுக்க தனி விசாரணை ஆணையத்தை அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும், மோதல் கொலைகள் குறித்து பத்திரிகைகளில் செய்தி வந்தால், அவற்றை நீதிமன்றங்கள் தானாகவே முன் வந்து எடுத்து விசாரிக்க வேண்டும் என்றும் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|