|
| டாக்டர்கள் ஊதிய முரண்பாடு: குழு அமைக்க ஜெ. வலியுறுத்தல் |
| சென்னை (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 22 ஏப்ரல் 2008 ( 18:17 IST ) | |
மருத்துவர்களின் சம்பள முரண்பாடுகளை களைய ஊதியக்குழு அமைக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
மகத்தான மக்கள் சேவை புரியும் திறமையான மருத்துவர்களுக்கு போதுமான ஊதிய விகிதம், பதவி உயர்வு வழங்கப்படாத நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது. மருத்துவக் கல்லூரிகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கும் இதே நிலைமை தான்.
ஆந்திரா, கர்நாடகா அரசு மருத்துவத்துறை, பொது சுகாதாரத் துறைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் அதிக ஊதியம் மற்றும் பதவி உயர்வுகளைப் பெற்று வருகிறார்கள். புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான சம்பளம் மற்றும் இதர படிகள் வழங்கப்படுகின்றன.
ஆனால், தமிழ்நாட்டில் பணியாற்றும் அரசு மருத்துவர்களின் நிலை மட்டும் மிகவும் பரிதாபமானதாக உள்ளது.
விலைவாசி உயர்வு, கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு, பால் விலை உயர்வு, மின்சாரக் கட்டணம் உயர்வு என அனைத்திற்கும் அண்டை மாநிலங்களைச் சுட்டிக்காட்டி புள்ளி விவரங்களை அளிக்கும் கருணாநிதி, தமிழக அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகளில் பணியாற்றும் மருத்துவர்களின் ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு முரண்பாடுகளை களைய அண்டை மாநில அரசுகள் நடைமுறைப்படுத்தும் முறையைப் பின்பற்றும் வகையில், ஒரு சிறப்பு ஊதியக் குழு அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தச் சிறப்பு ஊதியக் குழுவின் பரிந்துரைகள், 6வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கு முன்பு நடைமுறைப் படுத்தப்பட வேண்டும்.
இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :
மனதில் பட்டதை மறக்காமல் பேசும் குணமுடைய நீங்கள், எதிரிக்கும் நல்லதே நினைப்பவர்கள்.உங்களுக்கு இந்த... |
| |
|
|
|
|
 | | WD |
| | | சண்ட | | ரஜினியின் 'மாப்பிள்ளை' கதையில் கூடுதலாக ஆக்சன், கவர்ச்சி மற்றும் காமெடி கலந்து சுந்தர்.சி... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - கோடை காலத்தில் பெரும்பாலானோரும் உடல் சூட்டினால் அவதியுறும் நிலை... |
| |
|
|
|
|
|
|
|