யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
தமிழக அரசுக்கு எதிரான உட்லண்ட்ஸ்சின் மனு தள்ளுபடி
சென்னை (ஏஜென்சி), 22 ஏப்ரல் 2008   ( 13:57 IST )
தமிழ்நாடு விவசாய தோட்டக்கலை சங்கத்திற்கு குத்தகைக்கு விடப்பட்ட அரசு நிலத்தை மீண்டும் எடுத்துக் கொள்ள தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என்ற உத்தரவை மறு ஆய்வு செய்ய கோரும் உட்லண்ட்ஸ் டிரைவ் இன் ஓட்டல் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

அரசு குத்தகைக்கு வழங்கிய 396 ஏக்கர் நிலத்தை, உட்லண்ட்ஸ் டிரைவ் இன் ஓட்டலுக்கு தமிழ்நாடு விவசாய தோட்டக்கலை சங்கம் மேல் குத்தகைக்கு விட்டது.

இதனையடுத்து, 1989-ல் தமிழக அரசு மீண்டும் அந்த நிலத்தை எடுத்துக் கொண்டது.அரசின் இந்த நடவடிக்கையை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தர்மாராவ், வேணுகோபால் ஆகியோர் அரசின் நடவடிக்கை சரி என்றும் குத்தகைக்கு விட்ட நிலத்தை அரசு மீண்டும் எடுத்துக் கொள்ளலாம் என்றும் உத்தரவிட்டனர்.

இந்நிலையில், இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யுமாறு ஓட்டலின் பங்குதாரர் முரளிராவ் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை அதே நீதிபதிகள் விசாரித்து, மறு ஆய்வு செய்ய மறுத்து தள்ளுபடி செய்தனர்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
உலக பு‌த்தக‌ ‌தின‌ம்: சென்னையில் சிறப்புப் கண்காட்சி
தேவர் சிலை அவமதிப்பை கண்டித்து 24ம் தேதி பந்த்: கார்த்திக்
தமிழக அரசு டாக்டர்கள் சங்கத்தினர் உண்ணாவிரதம்
மதுரையில் தேவர் சிலை அவமதிப்பு: ஒருவர் கைது
கழிவு அடைப்புகளை சரி செய்ய இயந்திரம் அ‌றிமுக‌ம்
' விதிமுறைப்படியே பிரியங்கா-நளினி சந்திப்பு '
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : மனதில் பட்டதை மறக்காமல் பேசும் குணமுடைய நீங்கள், எதிரிக்கும் நல்லதே நினைப்பவர்கள்.உங்களுக்கு இந்த...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
சண்ட
ரஜினியின் 'மாப்பிள்ளை' கதையில் கூடுதலாக ஆக்சன், கவர்ச்சி மற்றும் காமெடி கலந்து சுந்தர்.சி...
யாரடி ‌நீ மோ‌கி‌னி
தரகு
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - கோடை காலத்தில் பெரும்பாலானோரும் உடல் சூட்டினால் அவதியுறும் நிலை...
மேலும் படிக்க|மேலும்...