யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
தேவர் சிலை அவமதிப்பை கண்டித்து 24ம் தேதி பந்த்: கார்த்திக்
மதுரை (ஏஜென்சி), 22 ஏப்ரல் 2008   ( 13:25 IST )
துரையில் தேவர் சிலை அவமதிக்கப்பட்டதை கண்டித்து, வரும் 24ம் தேதி தென் மாவட்டங்களில் பந்த் நடத்த பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில தலைவரான நடிகர் கார்த்திக் அழைப்பு விடுத்துள்ளார்.

மதுரை கோரிப்பாளையத்தில் தேவர் சிலை அவமதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.இதன் எதிரொலியாக நடந்த வன்முறையில் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இன்றும் 2வது நாளாக அங்கு பதற்றம் நிலவுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக திண்டுக்கல் பகுதியை சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே, பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில தலைவர், நடிகர் கார்த்திக் தேவர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், "தேவர் சிலை தொடர்ந்து அவமதிக்கப்பட்டு வருகிறது. தற்போது 6 வது முறையாக அவமதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு அரசு நடவடிக்க‌ை எடுக்க வேண்டும்.

தேவர் சிலை அவமதிக்கப்பட்டதை கண்டித்து வரும் 24ம் தேதி தென்மாவட்டங்களில் பந்த் நடத்தவுள்ளோம். விலைவாசி உயர்வு, ஒகேனக்கல் விவகாரம் ஆகிய பிரச்சனைகளையும் முன்வைத்து இந்த பந்த் நடத்தப்படுகிறது" என்றார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
தமிழக அரசுக்கு எதிரான உட்லண்ட்ஸ்சின் மனு தள்ளுபடி
உலக பு‌த்தக‌ ‌தின‌ம்: சென்னையில் சிறப்புப் கண்காட்சி
தமிழக அரசு டாக்டர்கள் சங்கத்தினர் உண்ணாவிரதம்
மதுரையில் தேவர் சிலை அவமதிப்பு: ஒருவர் கைது
கழிவு அடைப்புகளை சரி செய்ய இயந்திரம் அ‌றிமுக‌ம்
' விதிமுறைப்படியே பிரியங்கா-நளினி சந்திப்பு '
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : மனதில் பட்டதை மறக்காமல் பேசும் குணமுடைய நீங்கள், எதிரிக்கும் நல்லதே நினைப்பவர்கள்.உங்களுக்கு இந்த...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
சண்ட
ரஜினியின் 'மாப்பிள்ளை' கதையில் கூடுதலாக ஆக்சன், கவர்ச்சி மற்றும் காமெடி கலந்து சுந்தர்.சி...
யாரடி ‌நீ மோ‌கி‌னி
தரகு
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - கோடை காலத்தில் பெரும்பாலானோரும் உடல் சூட்டினால் அவதியுறும் நிலை...
மேலும் படிக்க|மேலும்...