|
| தமிழக அரசு டாக்டர்கள் சங்கத்தினர் உண்ணாவிரதம் |
| திருச்சிராப்பள்ளி(ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 22 ஏப்ரல் 2008 ( 13:02 IST ) | |
ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு டாக்டர்கள் சங்கத்தினர் திருச்சியில் இன்று ஒரு நாள் அடையாளம் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மாநிலம் முழுவதும் நடைபெறும் போராட்டத்தின் ஒரு பகுதியாக திருச்சியில் இன்று இந்த போராட்டம் நடைபெறுகிறது.
அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கான சம்பளத்தை உயர்த்த வேண்டும், குறிப்பிட்ட கால இடைவெளியில் பதவி உயர்வு அளிக்கப்பட வேண்டும், வேலை செய்யும் நேரம் வாரத்திற்கு 40 மணி நேரம் என்றிருப்பதை குறைக்க வேண்டும் , பல்வேறு துறைகளில் காலியாக உள்ள துணை இயக்குனர்களுக்கான பதவிகளை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.
இந்த போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அரசு டாக்டர்கள் சங்கத்தின் திருச்சிராப்பள்ளி பிரிவு தலைவர் எஸ். செல்வபாண்டியன் , தங்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தைவிட ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் பணிபுரியும் அரசு டாக்டர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகமாக உள்ளதாக கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :
மனதில் பட்டதை மறக்காமல் பேசும் குணமுடைய நீங்கள், எதிரிக்கும் நல்லதே நினைப்பவர்கள்.உங்களுக்கு இந்த... |
| |
|
|
|
|
 | | WD |
| | | சண்ட | | ரஜினியின் 'மாப்பிள்ளை' கதையில் கூடுதலாக ஆக்சன், கவர்ச்சி மற்றும் காமெடி கலந்து சுந்தர்.சி... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - கோடை காலத்தில் பெரும்பாலானோரும் உடல் சூட்டினால் அவதியுறும் நிலை... |
| |
|
|
|
|
|
|
|