யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
மதுரையில் தேவர் சிலை அவமதிப்பு: ஒருவர் கைது
மதுரை (ஏஜென்சி), 22 ஏப்ரல் 2008   ( 12:28 IST )
மதுரையில் தேவர் சிலை அவமதிக்கப்பட்டது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மனநோயாளியாக இருக்கலாம் என்று தெரிகிறது.

மதுரை கோரிப்பாளையத்தில் தேவர் சிலை அவமதிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதை கண்டித்து நடந்த வன்முறையில் பஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இன்றும் 2வது நாளாக அந்த பகுதியில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது.

இந்நிலையில் அவமதிக்கப்பட்ட தேவர் சிலை உள்ள பகுதியில், மர்ம நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான நிலையில் சுற்றிக் கொண்டிருந்தார்.அவரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

இதில், அவர் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த திருவழகன் என்பதும், தேவர் சிலையை அவர் அவமதித்ததும் தெரியவந்தது.

திருவழகன் தொடர்ந்து முன்னுக்குப் பின் முரணாக பேசியபடி இருந்தார். இதனால் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்று தெரிகிறது.

எனினும், அவரை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
கழிவு அடைப்புகளை சரி செய்ய இயந்திரம் அ‌றிமுக‌ம்
' விதிமுறைப்படியே பிரியங்கா-நளினி சந்திப்பு '
மதுரையில் தேவர் சிலை அவமதிப்பு : வைகோ கண்டனம்
பிரியங்காவின் மனிதநேயம் : திருமாவளவன் புகழாரம்
குழந்தைகள் மாறிய விவகாரம்: இன்று மரபணு சோதனை
வைகோவின் மதிமுகவே உண்மை : தேர்தல் ஆணையத்தில் உறுதி
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : மனதில் பட்டதை மறக்காமல் பேசும் குணமுடைய நீங்கள், எதிரிக்கும் நல்லதே நினைப்பவர்கள்.உங்களுக்கு இந்த...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
சண்ட
ரஜினியின் 'மாப்பிள்ளை' கதையில் கூடுதலாக ஆக்சன், கவர்ச்சி மற்றும் காமெடி கலந்து சுந்தர்.சி...
யாரடி ‌நீ மோ‌கி‌னி
தரகு
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - கோடை காலத்தில் பெரும்பாலானோரும் உடல் சூட்டினால் அவதியுறும் நிலை...
மேலும் படிக்க|மேலும்...