|
| கழிவு அடைப்புகளை சரி செய்ய இயந்திரம் அறிமுகம் |
| சென்னை(ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 22 ஏப்ரல் 2008 ( 12:12 IST ) | |
சென்னையில் பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு எடுப்பதற்காக தானியங்கி தூர்வாரும் இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
சென்னையில் 2671 கிலோ மீட்டர் நீளத்திற்கு கழிவுநீர் குழாய்கள் மற்றும் 77,081 நுழைவாயில்கள், 185 கழிவுநீரேற்று நிலையங்கள் உள்ளன.இவற்றில் சேரும் கழிவுநீர் கழிவுகளை சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம், கழிவுநீர் நுழைவாயில்கள் மற்றும் தொட்டிகள் ஆகியவற்றில் இறங்கி கழிவுகளை அகற்றும் நிலையை மாற்ற, தூர்வாரும் இயந்திரங்களை முதன்முறையாக அறிமுகப்படுத்தவுள்ளது.
குடிநீர் வாரியத்தின் மூலம் புதியதாக வாங்கப்பட்டுள்ள 3 தூர்வாரும் கழிவுநீர் அகற்றும் இயந்திரத்தின் பணிகளை சேப்பாக்கத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :
இந்த இயந்திரத்தின் மூலம், 32 அடி வரை ஆழமுள்ள கழிவுநீர் நுழைவாயிலில் படிந்துள்ள தூர் மற்றும் கழிவுகளைக்கூட அகற்ற முடியும். எடுக்கப்படும் இக்கழிவுகள் உடனடியாக அதே வாகனத்தில் அதற்கென்று பொருத்தப்பட்டுள்ள சேகரிப்பு அமைப்பில் சேகரிக்கப்பட்டு அகற்றப்படும். இதனால், கழிவுநீர் நுழைவாயில், கிணறுகளில் பணியாளர்கள் இறங்கி பணிபுரியும் நிலை தவிர்க்கப்படும்.
இந்த இயந்திரங்களின் செயல்பாட்டினை மூன்று மாதங்கள் ஆய்வு செய்தபின், இதுபோன்ற இயந்திரங்கள் அதிக அளவில் வாங்கப்படும்.
இந்த திட்டம் வெற்றி பெற்றால் படிப்படியாக, மற்ற மாநகராட்சிகளுக்கும், நகராட்சிகளுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :
மனதில் பட்டதை மறக்காமல் பேசும் குணமுடைய நீங்கள், எதிரிக்கும் நல்லதே நினைப்பவர்கள்.உங்களுக்கு இந்த... |
| |
|
|
|
|
 | | WD |
| | | சண்ட | | ரஜினியின் 'மாப்பிள்ளை' கதையில் கூடுதலாக ஆக்சன், கவர்ச்சி மற்றும் காமெடி கலந்து சுந்தர்.சி... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - கோடை காலத்தில் பெரும்பாலானோரும் உடல் சூட்டினால் அவதியுறும் நிலை... |
| |
|
|
|
|
|
|
|