யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
' விதிமுறைப்படியே பிரியங்கா-நளினி சந்திப்பு '
வேலூர்(ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 22 ஏப்ரல் 2008   ( 12:05 IST )
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் ளினியை வேலூர் சிறையில் பிரியங்கா ந்தித்துப் பேசியது ‌சிறை ட்ட விதிமுறைப்படியானதுதான் என்று அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.

வேலூர் பெண்கள் ‌சிறை‌யி‌ல் பிரியங்கா, நளினியை சந்தித்து பேசியது விதிமுறையை மீறிய செயல் என்று குற்றம் சாட்டப்பட்டது.இந்த நிலையில், பிரியங்கா- நளினி சந்திப்பு சட்டவிதிப்படி தான் நடந்தது என்று ‌சிறை உயர் அதிகாரிகள் ‌சிறை சட்ட விதிமுறை புத்தகத்தை மேற்கோள்காட்டி விளக்கம் அளித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது :

1894 ஆம் ஆண்டு ‌சிறை சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.அதன் அடிப்படையில், 1983-ம் ஆண்டு தமிழக அரசு ‌சிறை நடைமுறை சட்டவிதிகளை வெளியிட்டுள்ளது. இந்த விதிமுறையில் 520-லிருந்து 542 வரை ஜெயில் கைதிகளை, பார்வையாளர் சந்திப்பது பற்றி எடுத்து சொல்லப்பட்டுள்ளது.

‌சிறை கைதியையும், பார்வையாளரையும் சந்திக்க வைக்கும் ‌விஷயத்தில் குறிப்பிட்ட ‌‌சிறை க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர் முழு அதிகாரம் படைத்தவர் ஆகிறார். அவருடைய இந்த அதிகாரத்தில் யாரும் தலையிட முடியாது. தூக்குத்தண்டனை கைதியாக இருந்தால் மட்டுமே, அவரை பார்வையாளரை சந்திக்க வைக்கும் விஷயத்தில் அரசின் ஒப்புதலை பெறவேண்டும்.

மற்ற கைதிகளை, பார்வையாளர்கள் சந்திப்பதற்கு சம்பந்தப்பட்ட கைதிகளின் விருப்பம் இருந்தால் மட்டும் போதும். ‌சிறை க‌ண்கா‌ணி‌ப்பாளரே இந்த ‌விடயத்தில் முடிவு எடுக்கலாம். ‌சிறை சட்ட விதி 526(2)ன்படி தண்டனை கைதி ஒருவரை, பார்வையாளர் சந்திப்பதை ‌சிறை பார்வையாளர் குறிப்பேட்டில் பதிவு செய்யவேண்டிய அவசியம் இல்லை.

‌சிறை க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர், அவருடைய ரகசிய குறிப்பேட்டில் மட்டும் பதிவு செய்து கொள்ளலாம். அதுபற்றி உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும், பார்வையாளர், குறிப்பிட்ட கைதியை சந்திப்பதற்கு எழுத்து பூர்வமாக அனுமதி கேட்க வேண்டிய அவசியமும் இல்லை.வாய்மொழியாகவே அனுமதி கேட்டு ‌சிறை க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர் அதை அனுமதிக்கலாம்.

சிறை விதி 529(4) தான் முக்கிய விதியாகும்.இந்த விதிப்படி மிக மிக முக்கிய பிரமுகர்கள் ‌சிறை‌யி‌ல் உள்ள தண்டனை கைதியை, ‌சிறை‌யி‌ல் எந்த பகுதியிலும் விருப்பப்பட்ட இடத்தில் சந்தித்து பேச அனுமதிக்கலாம்.பார்வையாளர் கூடத்தில்தான் சந்திக்க வேண்டும் என்பதில்லை.

இந்த விதிகளின்படி தான், பிரியங்கா `இசட் பிளஸ்' பிரிவு பாதுகாப்புக்குரிய மிகப்பெரிய முக்கிய பிரமுகர் என்பதால், நளினியை சந்தித்து பேச அனுமதி வழங்கப்பட்டது. இதில் நளினியின் விருப்பம் மட்டுமே அவசியம். அவர் விருப்பம் தெரிவித்ததால், பிரியங்கா வாய்மொழியாக கேட்டுக்கொண்டதற்கிணங்க, ‌சிறை க‌ண்கா‌ணி‌‌ப்பாள‌ர் அவருடைய விசேஷ அதிகாரத்தின் கீழ் அனுமதி வழங்கியுள்ளார்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மதுரையில் தேவர் சிலை அவமதிப்பு : வைகோ கண்டனம்
பிரியங்காவின் மனிதநேயம் : திருமாவளவன் புகழாரம்
குழந்தைகள் மாறிய விவகாரம்: இன்று மரபணு சோதனை
வைகோவின் மதிமுகவே உண்மை : தேர்தல் ஆணையத்தில் உறுதி
' ப‌ட்ஜெ‌ட்டு‌க்கு ‌பி‌ன் விலைவாசி 20 % உயர்ந்துள்ளது '
'தமிழகத்தில் நூலக‌ங்க‌ள் அனை‌த்திற்கும் ‌க‌ணி‌னி வச‌தி'
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : மனதில் பட்டதை மறக்காமல் பேசும் குணமுடைய நீங்கள், எதிரிக்கும் நல்லதே நினைப்பவர்கள்.உங்களுக்கு இந்த...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
சண்ட
ரஜினியின் 'மாப்பிள்ளை' கதையில் கூடுதலாக ஆக்சன், கவர்ச்சி மற்றும் காமெடி கலந்து சுந்தர்.சி...
யாரடி ‌நீ மோ‌கி‌னி
தரகு
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - கோடை காலத்தில் பெரும்பாலானோரும் உடல் சூட்டினால் அவதியுறும் நிலை...
மேலும் படிக்க|மேலும்...