யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
குழந்தைகள் மாறிய விவகாரம்: இன்று மரபணு சோதனை
சென்னை (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 22 ஏப்ரல் 2008   ( 09:55 IST )
சென்னையிலுள்ள அரசு மருத்துவமனையில் குழந்தைகள் மாறியதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, உண்மையான தாயை கண்டறிஅவ்விரண்டு குழந்தைகளுக்கும் இன்று மரபணு சோதனை நடத்தப்படுகிறது.

ராயபுரத்தில் உள்ள ஆர்.எஸ்.ஆர்.எம். அரசு மகப்பேறு மருத்துவமனையில் கடந்த 17-ம் தேதியன்று பர்கத் பேகம் மற்றும் காமாட்சி ஆகிய இரு பெண்களில், ஒருவருக்கு ஆண் குழந்தையும், மற்றொருவருக்கு பெண் குழந்தையும் பிறந்தன. பிரசவத்துக்குப்பின், மருத்துவமனை ஊழியர்கள் அந்த குழந்தைகளை மாற்றி தாயார் பக்கத்தில் வைத்துவிட்டதால் குழப்பம் ஏற்பட்டது.

இரு குழந்தைகளின் பெற்றோரும் தங்களுக்குத்தான் ஆண் குழந்தை பிறந்ததாக சொந்தம் கொண்டாடியதால், குழந்தைகள் மாறியதற்கு காரணமான மருத்துவமனை ஊழியர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து, எந்தக் குழந்தை யாருக்கு பிறந்தது என்பதை உறுதி செய்வதற்காக மரபணு சோதனை நடத்துவதற்கான அனுமதி பெறுவதற்காக, சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் 16-வது கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு சுஜாதாவிடம் உரிய ஆவணங்களுடன் போலீசார் மனு தாக்கல் செய்தனர்.

இதுதொடர்பான ஆவணங்களை சரிபார்த்த மாஜிஸ்திரேட்டு சுஜாதா நேற்று மாலை 6 மணி அளவில் மருத்துவமனைக்குச் சென்று நேரில் ஆய்வு நடத்தி மரபணு சோதனைக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து, தடய அறிவியல் துறை பணியாளர்கள் நேற்றிவரவு இரு குழந்தைகள், அவர்களுடைய பெற்றோர் ஆகிய 6 பேருடைய `ரத்த மாதிரி'களை எடுத்துச் சென்றனர்.

மரபணு மூலம் உண்மை கண்டறிந்து இந்தச் சர்ச்சை முடிவுக்கு வர மேலும் 5 நாட்கள் வரை ஆகலாம் என்று தெரிகிறது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
வைகோவின் மதிமுகவே உண்மை : தேர்தல் ஆணையத்தில் உறுதி
' ப‌ட்ஜெ‌ட்டு‌க்கு ‌பி‌ன் விலைவாசி 20 % உயர்ந்துள்ளது '
'தமிழகத்தில் நூலக‌ங்க‌ள் அனை‌த்திற்கும் ‌க‌ணி‌னி வச‌தி'
தேவ‌ர் ‌சிலை அவம‌தி‌ப்பால் மதுரை‌யி‌ல் பத‌ற்ற‌‌ம்
' சத்துணவு மையங்களில் 10,327 ஊழியர்கள் நியமனம் '
தீவிரவாதிகளின் புகலிடமாகிவிட்டது தமிழகம் : ஜெ.
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : மனதில் பட்டதை மறக்காமல் பேசும் குணமுடைய நீங்கள், எதிரிக்கும் நல்லதே நினைப்பவர்கள்.உங்களுக்கு இந்த...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
சண்ட
ரஜினியின் 'மாப்பிள்ளை' கதையில் கூடுதலாக ஆக்சன், கவர்ச்சி மற்றும் காமெடி கலந்து சுந்தர்.சி...
யாரடி ‌நீ மோ‌கி‌னி
தரகு
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - கோடை காலத்தில் பெரும்பாலானோரும் உடல் சூட்டினால் அவதியுறும் நிலை...
மேலும் படிக்க|மேலும்...