யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
வைகோவின் மதிமுகவே உண்மை : தேர்தல் ஆணையத்தில் உறுதி
புதுடெல்லி/சென்னை (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 22 ஏப்ரல் 2008   ( 09:07 IST )
வைகோ தலைமையிலான கட்சிதான் உண்மையான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்பது தலைமை தேர்தல் ஆணையத்தில் உறுதி செய்யப்பட்டது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மதிமுகவின் அவைத் தலைவர் பதவியில் இருந்து எல். கணேசனும், துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து செஞ்சி ராமச்சந்திரனும் நீக்கப்பட்டனர்.

இவ்விவருமே மக்களவையில் உறுப்பினர்களாக இருக்கும் நிலையில், தங்கள் தலைமையில் உள்ள பிரிவுதான் உண்மையான மதிமுக என்று கூறி வைகோ தரப்பினரும், எல். கணேசன் தரப்பினரும் தலைமைத் தேர்தல் ஆணையாளரிடம் மனுக்கள் கொடுத்தனர்.

இதைத் தொடர்ந்து, கடந்த வியாழக்கிழமையன்று நடப்பதாக இருந்த இறுதி கட்ட விசாரணை, எல். கணேசனும், செஞ்சி ராமச்சந்திரனும் ஆஜராகதாதல் திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்றைய விசாரணைக்காக வைகோ, மூத்த வழக்கறிஞர் கிருஷ்ணமணி, மதிமுக நிர்வாகி கே.எஸ். ராதாகிருஷ்ணன் ஆகியோர் வந்திருந்தனர்.

ஆனால், எல். கணேசன் தரப்பில் இருந்து அவருடைய வழக்கறிஞர் தனஞ்செயன் மட்டுமே விசாரணைக்கு வந்தார்.

அப்போது, போதுமான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இல்லாததால் மதிமுகவுக்கு உரிமை கோரி தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்றுக்கொள்வதாக அவர் தெரிவித்தார்.

இதையடுத்து, வைகோ தலைமையிலான கட்சிதான் உண்மையான மதிமுக என்பது உறுதி செய்யப்பட்டுவிட்டது. அத்துடன், ஏற்கெனவே பயன்படுத்தி வந்த பம்பரம் சின்னமும் அவரது கட்சிக்கே சொந்தம் என்றும் முடிவாகிவிட்டது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
' ப‌ட்ஜெ‌ட்டு‌க்கு ‌பி‌ன் விலைவாசி 20 % உயர்ந்துள்ளது '
'தமிழகத்தில் நூலக‌ங்க‌ள் அனை‌த்திற்கும் ‌க‌ணி‌னி வச‌தி'
தேவ‌ர் ‌சிலை அவம‌தி‌ப்பால் மதுரை‌யி‌ல் பத‌ற்ற‌‌ம்
' சத்துணவு மையங்களில் 10,327 ஊழியர்கள் நியமனம் '
தீவிரவாதிகளின் புகலிடமாகிவிட்டது தமிழகம் : ஜெ.
கம்யூனிஸ்ட்டுகள் போராட்டம் நியாயமா ? கருணாநிதி கேள்வி
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : மனதில் பட்டதை மறக்காமல் பேசும் குணமுடைய நீங்கள், எதிரிக்கும் நல்லதே நினைப்பவர்கள்.உங்களுக்கு இந்த...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
சண்ட
ரஜினியின் 'மாப்பிள்ளை' கதையில் கூடுதலாக ஆக்சன், கவர்ச்சி மற்றும் காமெடி கலந்து சுந்தர்.சி...
யாரடி ‌நீ மோ‌கி‌னி
தரகு
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - கோடை காலத்தில் பெரும்பாலானோரும் உடல் சூட்டினால் அவதியுறும் நிலை...
மேலும் படிக்க|மேலும்...