|
| ' சத்துணவு மையங்களில் 10,327 ஊழியர்கள் நியமனம் ' |
| சென்னை(ஏஜென்சி), திங்கள்கிழமை, 21 ஏப்ரல் 2008 ( 18:04 IST ) | |
சத்துணவு மையங்களில் விரைவில் 10,327 ஊழியர்கள் புதிதாக நியமிக்கப்படுவார்கள் என்று தமிழக சமூக நலத்துறை அமைச்சர் பூங்கோதை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக சட்டசபையில் இன்று அவர் வெளியிட்ட அறிவிப்பில் கூறியதாவது :
சத்துணவு மையங்களிலும், குழந்தைகள் மையங்களிலும் காலியாக உள்ள 10,327 பணியிடங்கள் இந்த ஆண்டு நிரப்பப்படும்.
குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ் வருகின்ற வழக்குகளை ஆய்வு செய்து தீர்வு காண மாவட்டம் தோறும் தனி அதிகாரியும் சென்னைக்கு 2 தனி அதிகாரிகளும் நியமிக்கப்படுவார்கள்.
சத்துணவு மையங்களில் சரியான முறையில் பொருட்களை எடை போட்டு வழங்க ரூ.50 லட்சம் செலவில் மின்னணு தராசு வழங்கப்படும். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சிறார்களுக்கு வசதிக்காக ரூ.81 லட்சம் ஒதுக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரவாணிகள் குறித்த கணக்கெடுப்பு விவரங்கள் அடங்கிய தகவல் தொகுப்பு ஏற்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :
மனதில் பட்டதை மறக்காமல் பேசும் குணமுடைய நீங்கள், எதிரிக்கும் நல்லதே நினைப்பவர்கள்.உங்களுக்கு இந்த... |
| |
|
|
|
|
 | | WD |
| | | சண்ட | | ரஜினியின் 'மாப்பிள்ளை' கதையில் கூடுதலாக ஆக்சன், கவர்ச்சி மற்றும் காமெடி கலந்து சுந்தர்.சி... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - கோடை காலத்தில் பெரும்பாலானோரும் உடல் சூட்டினால் அவதியுறும் நிலை... |
| |
|
|
|
|
|
|
|