|
| தீவிரவாதிகளின் புகலிடமாகிவிட்டது தமிழகம் : ஜெ. |
| சென்னை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 21 ஏப்ரல் 2008 ( 17:59 IST ) | |
தீவிரவாதிகளின் புகலிடம் தமிழ்நாடு என்று சொல்லும் அளவிற்கு திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் தீவிரவாதிகளின் நடமாட்டம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருவதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாற்றியுள்ளார்.
இது தொர்டர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :
கடந்த 19 ஆம் தேதி கொடைக்கானலில் ஒரு நக்சலைட் போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதன் மூலமும் 10 நக்ஸல்கள் தப்பியோடிவிட்டதன் மூலமும் தமிழகம் தீவிரவாதிகளின் புகலிடம் ஆகிவிட்டது உறுதியாகிவிட்டது.
நான் இந்தத் தவறை சுட்டிக் காட்டும்போதெல்லாம் முதல்வர் கருணாநிதி தேவையில்லாத புள்ளிவிவரங்களை எல்லாம் எடுத்துச் சொல்லி எல்லாம் சரியாக இருப்பதாக காட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
அண்டை மாநிலங்கள் கடுமையான நடவடிக்கை எடுத்து வருவதால் நக்ஸல்கள் தமிழகத்திற்குள் ஊடுருவிக் கொண்டுள்ளனர்.
இந்த போலீஸ் என்கவுன்டர்களால் மக்களிடையே அச்சம் பரவியுள்ளது.இதனால் கொடைக்கானல் போன்ற சுற்றுலா தலங்களுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை குறைந்து சுற்றுலா பாதிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல், பண்ணைக்காடு, தாண்டிக்குடி, வடகவுஞ்சி ஆகிய மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக தீவிரவாதிகளின் நடமாட்டம் இருந்து வருகிறது.
கருணாநிதியின் ஆட்சியில் தீவிரவாதிகள் பரிணாம வளர்ச்சி அடைகிறார்கள் என்பதையே தமிழகத்தில் தற்போது நிலவும் சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன.திமுக அரசு நீடிக்கும் வரை தமிழ் நாட்டில் தீவிரவாதத்தை ஒடுக்குவது என்பது இயலாத காரியம்.
திமுக ஆட்சியில், காவல் துறையினர் மீதே உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்படுகிறது.காவல் நிலையங்களில், காவல் துறையினர் விழிப்புடன் தூங்காமல் பணியாற்றுகிறார்களா? என்று சோதனை நடத்தும் அளவுக்குக் காவல்துறை சீரழிந்து கிடக்கிறது. எனவே தீவிரவாத, பயங்கரவாத, நக்சலைட் இயக்கங்களை காவல் துறை ஒடுக்கும் என்று நம்பிக்கையை தமிழக மக்கள் இழந்து விட்டனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :
மனதில் பட்டதை மறக்காமல் பேசும் குணமுடைய நீங்கள், எதிரிக்கும் நல்லதே நினைப்பவர்கள்.உங்களுக்கு இந்த... |
| |
|
|
|
|
 | | WD |
| | | சண்ட | | ரஜினியின் 'மாப்பிள்ளை' கதையில் கூடுதலாக ஆக்சன், கவர்ச்சி மற்றும் காமெடி கலந்து சுந்தர்.சி... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - கோடை காலத்தில் பெரும்பாலானோரும் உடல் சூட்டினால் அவதியுறும் நிலை... |
| |
|
|
|
|
|
|
|