யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
கம்யூனிஸ்ட்டுகள் போராட்டம் நியாயமா ? கருணாநிதி கேள்வி
சென்னை(ஏஜென்சி), திங்கள்கிழமை, 21 ஏப்ரல் 2008   ( 17:47 IST )
வீர‌ப்ப‌ன் தேடுத‌ல் வே‌ட்டை‌யி‌ன் போது பா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்களு‌க்கு ‌நிவாரண உத‌வி செ‌ய்த ‌பிறகு‌ம் இந்திய ம்யூனிஸ்டு கட்சி போராடுவது சரியானதுதானா தமிழக முதலமைச்சர் ருணாநிதி கேள்வி எழுப்பினார்.

தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும், இது தொடர்பான பிரச்சனையை எழுப்பிய பாமக ச‌ட்டம‌ன்ற தலைவ‌ர் ஜி.கே.மணி, " இ‌ந்‌திய க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யை சே‌ர்‌‌ந்த சிவபுண்ணியம் ஆகியோர் வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்க வேண்‌டு‌ம்.ஏற்கனவே சிலர் உதவி பெற்றிருந்தாலும் விடுபட்டவர்களுக்கு தேவையான உதவி செய்ய வேண்டும் " என்று வலியுறுத்தினர்.

இதற்கு பதில் அளித்து முதலமைச்சர் கருணா‌நி‌தி பேசியதாவது :

வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அதிரடிப்படையினரால் சிலர் பாதிக்கப்பட்டனர். அது பற்றி அறிய நீதிபதி சதாசிவம் தலைமையில் ஒரு விசாரணைக் ஆணைய‌ம் அமைக்கப்பட்டது. அவர்கள் அறிக்கை தரும் முன்பே நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் முதல் கட்டமாக ரூ.20 லட்சம் நிதி கொடுக்கப்பட்டது.

அதற்கு பிறகு ஆணைய‌ம் அறிக்கை கிடைத்து, அதில் 89 பேர் பாதிக்கப்பட்டதாகவும், தமிழகத்தைச் சேர்ந்த பாதிப்புக்குள்ளானவர்களுக்கு அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது போல நிவாரணமாக ஒரு கோடியே 25 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டு ரசீதுகளும் பெறப்பட்டு‌ள்ளது.

இவ்வளவு நடந்த பிறகும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நீதி கேட்டு நெடும் பயணம் என்ற பெயரில் போராட்டம் நடத்துகிறார்கள். தமிழ் நாட்டில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் விசாரணைக் ஆணைய‌ம் கொடுத்த பட்டியல்படி நிதி வழங்கப்பட்டு விட்டது. கர்நாடக அரசு தான் நிதி உதவி வழங்க வேண்டும். எனவே போராட்டம் நடத்த வேண்டும் என்றால் கர்நாடகாவை எதிர்த்து தான் நடத்த வேண்டும்.

இந்த போராட்டம் பற்றி நான் கேள்விப்பட்டதும் தா.பாண்டியனை அழைத்து நிதி கொடுத்த ஆதாரங்களை காட்டினேன். தமிழக எல்லைக்குள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம் கடமையை செய்து விட்டோம். அதன் பிறகும் ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பது போல போராட்டம் நடத்துவது சரியான முன் மாதிரி அல்ல.

பிரச்சினை முடிந்து விட்ட பிறகு பிரச்சினை இருப்பதாக கூறி போராடுவது தேவை இல்லாதது என்பதை உறுப்பினர்கள் புரிந்து கொள்ள வேண்டும். யார் யார் பெயர் விடுபட்டது என்று தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு வந்திருக்கலாம். அதற்காக போராட்டம் நடத்துவது நியாயமா?

கர்நாடக அரசு இதை மட்டுமா கொடுக்கவில்லை.காவிரி முதல் ஒகேனக்கல் வரை எல்லாவற்றையும் தான் தர மறுக்கிறார்கள். அதை உரிய முறையில் போராடி பெறுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
வேலூர் சிறையில் முருகன் உண்ணாவிரதம் ?
'150 போலீஸ் ; குண்டு துளைக்காத ஸ்கார்பியோ வேண்டும்'
சட்டசபையிலிருந்து அதிமுக வெளிநடப்பு
சுப்பிரமணிய சாமிக்கு போட்டியாக களம் இறங்கிய டி.ராஜேந்தர்
பார்வையற்றோர் இசைக்குழுவுக்கு முழு சலுகை : வேலு உறுதி
தீயணைப்புத் துறையில் தமிழகம் 2-ம் இடம் : ஆற்காடு வீராசாமி
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : மனதில் பட்டதை மறக்காமல் பேசும் குணமுடைய நீங்கள், எதிரிக்கும் நல்லதே நினைப்பவர்கள்.உங்களுக்கு இந்த...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
சண்ட
ரஜினியின் 'மாப்பிள்ளை' கதையில் கூடுதலாக ஆக்சன், கவர்ச்சி மற்றும் காமெடி கலந்து சுந்தர்.சி...
யாரடி ‌நீ மோ‌கி‌னி
தரகு
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - கோடை காலத்தில் பெரும்பாலானோரும் உடல் சூட்டினால் அவதியுறும் நிலை...
மேலும் படிக்க|மேலும்...