|
| வேலூர் சிறையில் முருகன் உண்ணாவிரதம் ? |
| வேலூர்(ஏஜென்சி), திங்கள்கிழமை, 21 ஏப்ரல் 2008 ( 17:38 IST ) | |
பிரியங்காவை சந்தித்தது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தால் தனது மனைவி நளினி தன்னை சந்திக்க மறுத்ததால் வேலூர் சிறையில் முருகன் உண்ணாவிரதம் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினியை, பிரியங்கா கடந்த 19 ம் தேதி வேலூர் சிறைக்கு வந்து சந்தித்தார்.
இதையடுத்து பெண்கள் சிறையில் உள்ள நளினியை முருகன் சந்தித்தார். அப்போது பிரியங்காவை சந்தித்தது தொடர்பாக நளினி மீது முருகனுக்கு அதிருப்தி ஏற்பட்டதாகவும், இதனால் அந்தச் சந்திப்பின்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, முருகன் பாதியிலேயே வெளியே வந்துவிட்டதாகவும் அப்போது கூறப்பட்டது.
இந்நிலையில், மீண்டும் நளினியை சந்திக்க முருகன் முயன்றுள்ளார்.ஆனால், முருகனை சந்திக்க நளினி சந்திக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் கோபமும், விரக்தியுமடைந்த முருகன் நேற்று காலையிலிருந்து சாப்பிட மறுத்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இவர்களுக்கு இடையேயான மனஸ்தாபத்தை போக்க வெளிநாட்டில் படித்து வரும் முருகன் - நளின் தம்பதியரின் மகளை வேலூருக்கு வரவழைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :
மனதில் பட்டதை மறக்காமல் பேசும் குணமுடைய நீங்கள், எதிரிக்கும் நல்லதே நினைப்பவர்கள்.உங்களுக்கு இந்த... |
| |
|
|
|
|
 | | WD |
| | | சண்ட | | ரஜினியின் 'மாப்பிள்ளை' கதையில் கூடுதலாக ஆக்சன், கவர்ச்சி மற்றும் காமெடி கலந்து சுந்தர்.சி... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - கோடை காலத்தில் பெரும்பாலானோரும் உடல் சூட்டினால் அவதியுறும் நிலை... |
| |
|
|
|
|
|
|
|