யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
'150 போலீஸ் ; குண்டு துளைக்காத ஸ்கார்பியோ வேண்டும்'
சென்னை(ஏஜென்சி), 21 ஏப்ரல் 2008   ( 17:13 IST )
தனது பாதுகாப்புக்கு 150 போலீஸாரும், குண்டு துளைக்காத ஸ்கார்பியோ காரும் வழங்கப்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மனு தாக்கல் செய்துள்ளார்.

ஏற்கனவே ஜெயலலிதா இதுபோன்று தாக்கல் செய்த மனுவையடுத்து, அவர் முன்னர் வேண்டாம் என நிராகரித்த குண்டு துளைக்காத (அந்தஸ்து குறைந்தத ?) அம்பாசிடர் கார் அவருக்கு வழங்கப்பட்டது.அத்துடன் முன்னாள் முதல்வருக்கு அளிக்கப்படக்கூடிய அளவிலான பாதுகாப்பும் அவருக்கு அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தனது பாதுகாப்பு தொடர்பாக ஜெயலலிதா இன்று புதிதாக ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழக அரசியல் தலைவர்களில் என் உயிருக்குத் தான் விடுதலைப் புலிகளால் அதிக அச்சுறுத்தல் உள்ளது.எந்த நேரத்திலும் விடுதலைப் புலிகளால் எனக்கு ஆபத்து நேரிடலாம். இதை கருத்தில் கொண்டு 2001ல் எனக்கு `இசட்' பிரிவு பாதுகாப்பு தரப்பட்டது.

2006ம் ஆண்டுக்குப் பிறகு எனக்கு பாதுகாப்பை குறைத்து விட்டனர். எனக்கு மிரட்டல் அதிகமாக உள்ளது. சமீப காலமாக எனக்கு உரிய பாதுகாப்பு இல்லை.

என் வீட்டை சுற்றி மர்ம நபர்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது. மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என் வீடு அருகில் கைதாவதாக அடிக்கடி நடந்து வருகிறது. எனவே எனக்கு பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்.

எனக்கு குண்டு துளைக்காத பழைய அம்பாசிடர் கார் கொடுத்துள்ளனர்.அந்த காருக்கு பதில் குண்டு துளைக்காத டாடா சபாரி அல்லது ஸ்கார்பியோ கார் வழங்கப்பட வேண்டும். அந்த காரில் வெடிகுண்டுகளை செயல் இழக்க செய்யும் ஜாமர் கருவிகளைப் பொருத்த வேண்டும்.

என் பாதுகாப்புக்கு வரும் போலீசாருக்கு வாக்கி-டாக்கி உள்ளிட்ட நவீன கருவிகளை கொடுக்க வேண்டும். அதோடு போலீசார் தூரத்திலேயே கண்காணிக்க ஸ்பீடு காமிரா வழங்கப்பட வேண்டும்.

ஆந்திரா எதிர்க்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு வீட்டை சுற்றி 150 போலீசாரும் கமாண்டோ படை வீரர்களும் நிறுத்தப்பட்டுள்ளன்.அத்தகைய பாதுகாப்பை எனக்கும் அளிக்க வேண்டும். மேலும் ஆயுதப்படையில் நன்கு பயிற்சி பெற்ற கமாண்டோ வீரர்களை என் பாதுகாப்புக்கு நியமிக்க வேண்டும்.

பொதுக் கூட்டங்களுக்கு நான் செல்லும் போது முன்னதாகவே பொதுக் கூட்ட மேடைக்கு சென்று ஆய்வு செய்யும் போலீசார் வேண்டும். மேலும் வெடி குண்டுகளை கண்டுபிடிக்க மோப்ப நாய் வசதி செய்து தரப்பட வேண்டும்.

எனக்கு வரும் கடிதங்களில் வெடிகுண்டு உள்ளதா என்பதை கண்டுபிடிக்க நவீன கருவி தர வேண்டும்.

நான் வெளி இடங்களுக்கு செல்லும்போது என் வாகனங்களுடன் வர ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று தர வேண்டும். அந்த ஆம்புலன்சில் ஸ்ட்ரெச்சர், ஆக்ஜிசன் சிலிண்டர் மற்றும் மருந்து வசதிகள் இருக்க வேண்டும். மேலும் அந்த ஆம்புலன்சில் என் ரத்த வகையை சேர்ந்த ரத்தம் இருப்பு வைத்திருக்க வேண்டும்.

கொடநாடு எஸ்டேட்டில் நான் தங்கி உள்ளேன். அங்கு சரியான முறையில் மின் வசதி இல்லை. எனவே உடனே மின் இணைப்பு தர வேண்டும்.

நான் தங்கி இருக்கும் இடத்தை சுற்றி ஒளி வெள்ளம் தரக்கூடிய போக்கஸ் விளக்குகளை பொருத்த வேண்டும். அதற்கான மின் இணைப்பை மாநில அரசே கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் ஜெயலலிதா கூறியுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பு தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் , பொது இடங்களில் நடமாட அஞ்சும் அரசியல்வாதிகள் அரசியலுக்கு வருவது ஏன் என்று காட்டமாக கேட்டதோடு, இவர்கள் 'பந்தா' வுக்காகவே இதுபோன்ற பாதுகாப்பை கோருகின்றனர் என்றும் கூறியிருந்தது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சட்டசபையிலிருந்து அதிமுக வெளிநடப்பு
சுப்பிரமணிய சாமிக்கு போட்டியாக களம் இறங்கிய டி.ராஜேந்தர்
பார்வையற்றோர் இசைக்குழுவுக்கு முழு சலுகை : வேலு உறுதி
தீயணைப்புத் துறையில் தமிழகம் 2-ம் இடம் : ஆற்காடு வீராசாமி
உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு புறக்கணிப்பு: அரசு விளக்கம்
'சரப்ஜித் சிங் உயிரைக் காக்க உலக நாடுகள் முன்வர வேண்டும்'
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : மனதில் பட்டதை மறக்காமல் பேசும் குணமுடைய நீங்கள், எதிரிக்கும் நல்லதே நினைப்பவர்கள்.உங்களுக்கு இந்த...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
சண்ட
ரஜினியின் 'மாப்பிள்ளை' கதையில் கூடுதலாக ஆக்சன், கவர்ச்சி மற்றும் காமெடி கலந்து சுந்தர்.சி...
யாரடி ‌நீ மோ‌கி‌னி
தரகு
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - கோடை காலத்தில் பெரும்பாலானோரும் உடல் சூட்டினால் அவதியுறும் நிலை...
மேலும் படிக்க|மேலும்...