யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
சட்டசபையிலிருந்து அதிமுக வெளிநடப்பு
சென்னை(ஏஜென்சி), திங்கள்கிழமை, 21 ஏப்ரல் 2008   ( 13:40 IST )
திமுக உட்கட்சி தேர்தலின்போது நடைபெற்ற ன்முறை சம்பவம் குறித்து பேனுமதியளிக்காததற்கு திர்ப்பு தெரிவித்து தமிழக ட்டசபையிலிருந்து அதிமுகவினர் இன்று வெளிநடப்பு செய்தனர்.

உடுமலைப்பேட்டை மற்றும் ஆண்டிப்பட்டி ஆகிய இடங்களில் சமீபத்தில் நடைபெற்ற திமுக உட்கட்சி தேர்தலின்போது வன்முறை வெடித்தது.இந்த வன்முறையின்போது போலீஸ் டிஎஸ்பி ஒருவர் தாக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், சட்டசபையில் இன்று பூஜ்ய நேரம் எனப்படும் நேரமில்லா நேரத்தின்போது இப்பிரச்சனையை எழுப்பிய அதிமுக துணை தலைவர் ஓ.பன்னீர் செல்வம், இது தொடர்பாக பேச அனுமதிக்குமாறு கோரினார்.

ஆனால் இந்த பிரச்சனை திமுகவின் உட்கட்சி பிரச்சனை என்று கூறி பேச அனுமதி மறுத்த சபாநாயகர் ஆவுடையபன், ஆண்டிப்பட்டியில் இதேபோன்ற வன்முறை சம்பவம் அதிமுக இளைஞர் பாசறைக்கான உறுப்பினர் சேர்ப்பின்போது நடைபெற்றுள்ளதாகவும், இது குறித்து ஆண்டிப்பட்டி அதிமுக எம்.எல்.ஏ போலீசில் புகார் கொடுத்துள்ளார் என்றும் சுட்டிக்காட்டினார்.அதே சமயம் இது தொடர்பாக பன்னீர் செல்வம் கொடுத்த ஒத்திவைப்பு தீர்மானம் தனது பரிசீலனையில் உள்ளதாகவும் கூறினார்.

எனவே இது விஷயத்தில் பன்னீர் செல்வம் தம்மை கட்டாயப்படுத்த முடியாது என்றும், முடிவெடுக்கும் அதிகாரம் தனது தனிப்பட்ட உரிமை என்றும் ஆவுடையப்பன் கூறினார்.

அப்போது குறுக்கிட்டுப் பேசிய அவைத்தலைவரும், நிதியமைச்சருமான க.அன்பழகன், உட்கட்சி பிரச்சனை குறித்து விவாதிக்கக் கூடிய அமைப்பாக சட்டசபையை மாற்றிவிடக்கூடாது என்றும், இப்பிரச்சனை குறித்து பேச அனுமதிக்கலாமா கூடாதா என்று முடிவெடுக்க கூடிய அதிகாரம் சபாநாயகரின் தனிப்பட்ட உரிமை என்றும் கூறினார்.

ஆனால் அதனை ஏற்க மறுத்த அதிமுக உறுப்பினர்கள் இப்பிரச்சனை பற்றி பேச அனுமதிக்குமாறு வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.இருப்பினும் சபாநாயகர் மீண்டும் அனுமதி மறுத்ததை தொடர்ந்து ," திமுக ஆட்சியில் போலீசுக்கு கூட பாதுகாப்பில்லை " என்று குரல் எழுப்பியபடியே அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சுப்பிரமணிய சாமிக்கு போட்டியாக களம் இறங்கிய டி.ராஜேந்தர்
பார்வையற்றோர் இசைக்குழுவுக்கு முழு சலுகை : வேலு உறுதி
தீயணைப்புத் துறையில் தமிழகம் 2-ம் இடம் : ஆற்காடு வீராசாமி
உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு புறக்கணிப்பு: அரசு விளக்கம்
'சரப்ஜித் சிங் உயிரைக் காக்க உலக நாடுகள் முன்வர வேண்டும்'
சென்னை உயர் நீதிமன்ற மொழியாக தமிழ்: கருணாநிதி நம்பிக்கை
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : மனதில் பட்டதை மறக்காமல் பேசும் குணமுடைய நீங்கள், எதிரிக்கும் நல்லதே நினைப்பவர்கள்.உங்களுக்கு இந்த...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
சண்ட
ரஜினியின் 'மாப்பிள்ளை' கதையில் கூடுதலாக ஆக்சன், கவர்ச்சி மற்றும் காமெடி கலந்து சுந்தர்.சி...
யாரடி ‌நீ மோ‌கி‌னி
தரகு
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - கோடை காலத்தில் பெரும்பாலானோரும் உடல் சூட்டினால் அவதியுறும் நிலை...
மேலும் படிக்க|மேலும்...