யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
சுப்பிரமணிய சாமிக்கு போட்டியாக களம் இறங்கிய டி.ராஜேந்தர்
திருச்சி(ஏஜென்சி), 21 ஏப்ரல் 2008   ( 11:45 IST )
ஜார்ஜ் புஷ் அமெரிக்க அதிபரானதற்கு நான்தான் காரணம் , விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை சோனியா காந்தி ரகசியமாக சந்தித்துப் பேசியதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது என்ற ரீதியில் அரசியலில் அவ்வப்போது காமெடி பண்ணும் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமிக்கு போட்டியாக " இந்தா வந்துட்டே.......ன்!" என்பது போன்று பிரியங்கா, நளினி சந்திப்புக்கு நான்தான் மூல காரணம் என்று லட்சிய திமுக தலைவர் விஜய டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திருச்சியில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது :

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக எனது கட்சி சார்பில் சென்னையில் பொதுக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்துள்ளோம். ஆனால், தமிழக அரசு அதற்கு அனுமதி தராமல் மறுத்து வருகிறது.

வேலூர் மத்திய சிறையில் பிரியங்கா, நளினி இடையே நடந்த சந்திப்புக்கு நான் தான் மூல காரணம்.விரைவில் இலங்கை இனப் பிரச்சினைக்கு சுமூக தீர்வு ஏற்படும்.

விலைவாசி உயர்வைக் கண்டித்து லட்சிய திமுகதான் முதன் முதலில் குரல் கொடுத்தது.ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும் என்று நாங்கள்தான் முதலில் குரல் கொடுத்தோம்.

விலைவாசி பிரச்சினை நாட்டை உலுக்கி வருகிறது.இதுகுறித்து டெல்லியில் உள்ள எதிர்க்கட்சிகள் உறுதியாக குரல் கொடுக்காமல் இருப்பது வருத்தம் தருகிறது.

இடதுசாரிக் கட்சி எம்.பிக்கள் மக்களவையிலிருந்து வெளிநடப்பு செய்வதோடு நினறு விடுகிறார்கள்.ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் உள்ள பாமக உள்ளிட்ட கட்சிகள் இந்த விஷயத்தில் பெருத்த மெளனம் சாதிப்பது ஆச்சரியமாக உள்ளது.

விலைவாசி உயர்வால் மக்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர். 2009 ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் இப்பிரச்சனை நிச்சயம் எதிரொலிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பார்வையற்றோர் இசைக்குழுவுக்கு முழு சலுகை : வேலு உறுதி
தீயணைப்புத் துறையில் தமிழகம் 2-ம் இடம் : ஆற்காடு வீராசாமி
உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு புறக்கணிப்பு: அரசு விளக்கம்
'சரப்ஜித் சிங் உயிரைக் காக்க உலக நாடுகள் முன்வர வேண்டும்'
சென்னை உயர் நீதிமன்ற மொழியாக தமிழ்: கருணாநிதி நம்பிக்கை
விலைவாசி உயர்வு : கருணாநிதி கருத்துக்கு தா.பாண்டியன் சாடல்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : மனதில் பட்டதை மறக்காமல் பேசும் குணமுடைய நீங்கள், எதிரிக்கும் நல்லதே நினைப்பவர்கள்.உங்களுக்கு இந்த...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
சண்ட
ரஜினியின் 'மாப்பிள்ளை' கதையில் கூடுதலாக ஆக்சன், கவர்ச்சி மற்றும் காமெடி கலந்து சுந்தர்.சி...
யாரடி ‌நீ மோ‌கி‌னி
தரகு
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - கோடை காலத்தில் பெரும்பாலானோரும் உடல் சூட்டினால் அவதியுறும் நிலை...
மேலும் படிக்க|மேலும்...