யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
தீயணைப்புத் துறையில் தமிழகம் 2-ம் இடம் : ஆற்காடு வீராசாமி
சென்னை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 21 ஏப்ரல் 2008   ( 10:34 IST )
நாட்டிலேயே டெல்லிக்கு அடுத்தபடியாக மிழக தீயணைப்பு துறைதான் சிறந்து விளங்குகிறது என்று மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறினார்.

சென்னையில் தீயணைப்புத் தொண்டு வாரவிழாவில் கலந்துகொண்டு அவர் பேசுகையில், 'தமிழகத்தில் மொத்தம் 738 தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. இதில் 6,643 தீயணைப்பு வீரர்கள் பணியாற்றி வருகின்றனர். 25 கிலோ மீட்டர் இடைவெளியில் தீயணைப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன' என்றார்.

இந்தியாவில் டெல்லிக்கு அடுத்தபடியாக தமிழக தீயணைப்பு துறைதான் சிறந்து விளங்குகிறது என்ற அவர், ' 2004-ம் ஆண்டு சுனாமியின்போது தீயணைப்பு துறைக்கு 15 ஆயிரத்து 570 தொலைபேசி அழைப்புகள் வந்தன. இதில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கடல் அலையில் சிக்கிய 619 பேரை காப்பாற்றியுள்ளனர். இவ்வாறு விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றி, அவர்களுக்கு மறுவாழ்வு அளித்த தீயணைப்பு வீரர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்' என்று குறிப்பிட்டார்.

மேலும், 6-வது ஊதியக் குழு பரிந்துரைகள் நடைமுறைக்கு வந்தபிறகு, தீயணைப்புத் துறையினருக்கும், போலீசாருக்கும் இடையே ஊதிய வேறுபாடு இருந்தால், அதனைத் தீர்க்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்தார்.

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை கூடுதல் காவல்துறை இயக்குநர் கே.ஆர்.ஷியாம் சுந்தர் தலைமை தாங்கிய இவ்விழாவில், பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற தீயணைப்பு வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு புறக்கணிப்பு: அரசு விளக்கம்
'சரப்ஜித் சிங் உயிரைக் காக்க உலக நாடுகள் முன்வர வேண்டும்'
சென்னை உயர் நீதிமன்ற மொழியாக தமிழ்: கருணாநிதி நம்பிக்கை
விலைவாசி உயர்வு : கருணாநிதி கருத்துக்கு தா.பாண்டியன் சாடல்
நதிநீர் பிரச்சனைக்கு தீர்வு : பிரதமருக்கு ராமதாஸ் யோசனை
கள்ளழகர் ஆற்றில் இறங்கினார்; பல லட்சம் பக்தர்கள் தரிசனம்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : மனதில் பட்டதை மறக்காமல் பேசும் குணமுடைய நீங்கள், எதிரிக்கும் நல்லதே நினைப்பவர்கள்.உங்களுக்கு இந்த...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
சண்ட
ரஜினியின் 'மாப்பிள்ளை' கதையில் கூடுதலாக ஆக்சன், கவர்ச்சி மற்றும் காமெடி கலந்து சுந்தர்.சி...
யாரடி ‌நீ மோ‌கி‌னி
தரகு
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - கோடை காலத்தில் பெரும்பாலானோரும் உடல் சூட்டினால் அவதியுறும் நிலை...
மேலும் படிக்க|மேலும்...